ஆடி மாதத்தின் கடைசி வாரம் - தவற விடாதீர்கள்!!!
தொலைக்காட்சி கண்டுபிடித்த ஜான் லூக்கி பிரட் என்பவர் ஆடி மாதத்தில் பிறந்தவர்… உலகம் முழுவதிலும் ஒவ்வொரு வீட்டிலும் தொலைக்காட்சி உள்ளது… ஆடி மாதத்திற்கும் கண்டுபிடிப்புக்கும் என்ன சம்பந்தம் என்று சிலர் கேட்கலாம்… சூரியன் கடகத்தில் இருக்க ஆடி மாதம் முழுவதும் பெண் தெய்வ வழிபாட்டின் பரிபூரண சக்தி பூமியின் மேல் விழுகிறது… இப்படியான சூழ்நிலையில் உலகம் முழுவதும் ஆடி மாதத்தில் பிறந்த அந்த குழந்தைக்கு பெண் தெய்வம்சம் பொருந்திய கலை நயமிக்க படைப்புகளுக்கு சொந்தக்காரராக மாற வாய்ப்புண்டு இது அவரவர் தனிப்பட்ட ஜாதகத்தை பொறுத்து உலகம் முழுவதிலும் பயன்படுத்தக்கூடிய பொருட்களை கண்டுபிடிப்பவராக கூட மாறலாம்…
ஆடி மாதத்தின் இறுதி வாரத்தை நெருங்கி விட்டோம்… எந்தெந்த கிழமைகளில் என்ன தெய்வத்தை வழிபட வேண்டும்…. அப்படி நீங்கள் செய்தால் உங்களுக்கு வேண்டிய வரத்தை தெய்வங்கள் அள்ளிக் கொடுக்கும்…
புதன் கிழமை: 13.08.2025
செல்வம் சேர மகாலட்சுமி வழிபாடு!!!
புதன்கிழமை காலை எழுந்து நீராடி விட்டு வீட்டிற்கு வெளியே மஞ்சள் தெளித்து… மகாலட்சுமியின் மந்திரத்தை ஜெபியுங்கள்… தெரியாதவர்கள் மகாலட்சுமியின் உருவத்தை மனதில் நினைத்துக் கொண்டு வீட்டில், கஷ்டங்கள் நீங்கி செல்வம் பெருகி வாழ்வில் நிம்மதி கிடைக்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்யுங்கள்… சூரியனுடன் வக்ரம் பெற்ற புதன் சேர்க்கை திருமால் மார்பில் எப்பொழுதும் சாய்ந்திருக்கும் மகாலட்சுமியின் அருளை உங்களுக்கு கொண்டு வரும்… வீடு கட்டி பட்டா வராமல் இருப்பவர்கள் பத்திர பதிவு சார்ந்த பிரச்சினைகளில் உள்ளவர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லாமை வீட்டில் செல்வம் சேராத நிலைமை நீண்ட நாட்களாக திருமணமாகாமல் இருக்கும் ஆண் பெண் குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கும் பெண்கள் நோயில் இருக்கும் மக்கள் இப்படி கஷ்டத்தில் இருப்பவர்கள் புதன்கிழமையை வரப் பிரசாதமாக பயன்படுத்தலாம் அண்டத்தை காக்கும் திருமாலின் ஆசிர்வாதம் நம் அனைவருக்கும் ஆடி இறுதி புதன்கிழமையில் நமக்கு கிட்டும்…
வியாழக்கிழமை : 14.08.2025
குருவின் அனுக்கிரகம் கொண்ட வியாழக்கிழமையில் சித்தர்கள் வழிபாடு செய்வது நல்லது. அதே போல குருமார்களான ராகவேந்திரர், சாய்பாபா, குரு தட்சிணாமூர்த்தி நவகிரகத்தில் இருக்கும் குரு போன்றோரை வணங்குவதன் மூலம் நமக்கு குருவால் ஏற்படக்கூடிய நன்மைகள் மிகுந்து கிடைக்கும்… சூரியன் கடகத்தில் இருக்க... குரு மிதுனத்தில் இருக்க... அறிவு யோகம் என்று சொல்லக்கூடிய மறைபொருள் ரகசியங்கள் நமக்கு வெளிப்பட வாய்ப்பு உண்டு… குடும்பத்தில் கஷ்டத்தோடு சில விஷயங்களை கடந்து செல்பவர்களுக்கு இந்த வியாழக்கிழமை மிக உகந்தது… கடகத்தில் குரு உச்சம் அடைகிறார்… ஆகவே இந்த ஆடி மாதத்தில் சூரியன் கடகத்தில் பிரயாணம் செய்வது குருவின் வெளிச்சத்தை சூரியன் மூலமாக பூமிக்கு கொண்டு வருகிறது… சரஸ்வதியை மாணவர்கள் வணங்குவதன் மூலம் நல்ல படிப்பு சிறந்த அறிவாற்றல் போன்றவற்றை பெற முடியும்….
வெள்ளிக்கிழமை : 15.08.2025
இறுதி ஆடி வெள்ளியான இந்த தினத்தில் அனைத்து பெண் தெய்வங்களையும் ஒருசேர வழிபட வேண்டும்… உங்களுக்குப் பிடித்த இஷ்ட பெண் தெய்வத்தை எவ்வளவு அதிகமாக நேசித்து வழிபடுகிறீர்களோ? அதே போல அம்மன், துர்க்கை தேவி, மகாலட்சுமி, சரஸ்வதி… முப்பெரும் தேவியர்கள் அவர்களுடைய அவதாரங்கள் என்று நம் மனதிற்குப் பட்ட அத்தனை பெண் தெய்வங்களையும் ஒரு சேர வழிபட்டால் இந்த வெள்ளிக்கிழமைகளில் பெண் சாபங்கள் நீங்கி வாழ்வு வளம் பெறும்….