நாகலாந்து ஆளுநராக இருந்த இல.கணேசன் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் அவரது உடல் 42 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது

பாஜகவின் மூத்த தலைவரும் ஆளுநருமான இல. கணேசன் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் சென்னைக்கு வந்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்ப்பட்டதால் வீடு திரும்பினார். 

இந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி வீட்டில் மயங்கி விழுந்த இல.கணேசனை அவரது உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர், இதன் பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார், அதனை தொடர்ந்து கடந்த 8 ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில் அவருக்கு தலைசுற்றல் ஏற்ப்பட்டது, எனவே அவரை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டார். 

அவரை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள் அவருக்கு தலையில் ரத்தக்கட்டு இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவர்கள் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்த நிலையில் தீவிர கண்காப்பில் இருந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இயற்கை எய்தினார், இதை அடுத்து அவரது உடல் தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அவரது உடலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, முதல் அமைச்சர் முக ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் பல அரசியல் கட்சி தலைவர்கள் என அரசியல் கட்சி தலைவர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர், இதனை தொடர்ந்து இல.கணேசனின் உடல் வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு  பெசன்ட் மின் மயானத்தில் எடுத்து செல்லப்பட்டது, அங்கு நாகலாந்து முதல் மந்திரி நைபியு ரியோ, தமிழக அமைச்சர்கள், பாஜக தலைவர் நயினார் நகேந்திரன் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அதன் பிறகு இல.கணேசன் உடலுக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்ட 42 குண்டுகள் தொடர்ந்து 3 முறை வானத்தை நோக்கி சுடப்பட்டு  மரியாதை செலுத்தப்பட்டது, இதன் பின்னர் குடும்பத்தினர் அவரின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்த பின்னர் அவரது உடல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.