"உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பாநாதர் கோயில் கும்பாபிஷேகம் வருகின்ற டிசம்பர் மாதம் எட்டாம் தேதி நடைபெற உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்"
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் - Ekambareswarar Temple (Kanchipuram)
பஞ்சபூத ஸ்தலங்கள் என்பது, சிவனுக்கு உரிய மிக முக்கிய கோவில்களாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் உள்ள, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் நிலத்திற்கு உரிய கோவிலாக பார்க்கப்படுகிறது. இதனால் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், உலக பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக இருந்து வருகிறது. மொத்தம் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவில் முதல் கட்டுமானங்கள், 600 ஆம் ஆண்டே , கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
பல்லவர் காலம் முதல் இந்த கோவில் பிரசித்தி பெற்றதாக இருந்து வருகிறது. அதே போன்று நாயக்க மன்னர்கள் காலம் வரை பல்வேறு மன்னர்களும் திருப்பணி செய்துள்ளனர். பல்வேறு மன்னர்கள் திருப்பணி செய்ததற்கான, ஆதாரமாக கல்வெட்டுக்கள் சான்றுகளாக கிடைத்துள்ளன. காஞ்சிபுரம் ஏகாம் நகர் கோயிலில், பெரிய ராஜகோபுரம் மன்னர் கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
தெற்கு ராஜகோபுரம், பல்லவ கோபுரம், மேற்கு கோபுரம் என 3 வகை ராஜகோபுரங்கள் இருப்பது மிகவும் பிரசித்தி பெற்றதாக பார்க்கப்படுகிறது. கிழக்குத்திசை நோக்கி இருக்கும் ஏகாம்பரநாதர் சந்நிதியில் மூலவராக மணல் லிங்கமாக சுயம்புவாக ஏகாம்பர நாதர் அருள்பாலிக்கிறார். கோயில் உட்புறத்தில் சிவகங்கை குளம் மற்றும், கம்பா தீர்த்த குளம் உள்ளது. கோயிலுக்கு வெளிப்பகுதியில் சர்வதீர்த்தமும், மங்கள தீர்த்தமும் உள்ளன.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் திருப்பணிகள் - Ekambaranathar Temple
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று, 17 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் ஏகாம்பரார் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் ஏகாம்புநாதர் கோயில் திருப்பணிகள் 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேக திருப்பணிக்கு, இந்து அறநிலைத்துறை சார்பில் 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மீதமுள்ள 16 கோடி ரூபாய் நிதி உபயதாரர்கள் மூலம், வசூலிக்கப்பட்டு கோவில் திருப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
ராஜகோபுரம் பணி நிறைவடைந்தது - Ekambaranathar Temple Renovation
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் திருப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஏகாம்பரநாதர் கோயிலில் பிரதான ராஜகோபுரத்தின் பணிகள், நிறைவடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் ஏகாம்பநாதர் கோயிலுக்கான திருப்பணிகளில் 12 பணிகள் நிறைவடைந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறுதி கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் எப்போது ? - Ekambaranathar Temple Kumbabishekam Date
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் வருகின்ற டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கும்பாபிஷேகம், வருகின்ற டிசம்பர் மாதம் எட்டாம் தேதி (08-12-2025) நடைபெறும் என அறிவித்துள்ளார். அதற்குள் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் திருப்பணிகள் நிறைவடையும் என தெரிவித்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால், காஞ்சிபுரம் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.