Krishnagiri power shutdown : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( நவம்பர் 27, 2025, வியாழக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜூஜூவாடி, பேகேப்பள்ளி துணை மின்நிலையங்கள் பராமரிப்பு
மின்தடை பகுதிகள்:-
- ஜூஜூவாடி
- மூக்கண்டப்பள்ளி
- பேகேப்பள்ளி
- பேடரப்பள்ளி
- தர்கா
- சின்ன எலசகிரி
- சிப்காட் ஹவுசிங் காலனி
- அரசனட்டி
- சிட்கோ பேஸ்-1ல்
- இருந்து சூர்யா நகர் வரை
- பாரதி நகர்
- சிப்காட்
- எம்.ஜி.ஆர்., நகர்
- சிவாஜி நகர்
- என்.டி.ஆர்., நகர்
- காமராஜ் நகர்
- எழில் நகர்
- ராஜேஸ்வரி லே அவுட்
- நல்லுார்
- சித்தனப்பள்ளி
- மடிவாளம்
- நல்லுார் அக்ரஹாரம்
ஓசூர் துணை மின்நிலையம் பராமரிப்பு பணி
மின்தடைப் பகுதிகள்:
- டி.வி.எஸ்., நகர்
- அந்திவாடி
- மத்திகிரி
- டைட்டான் டவுன் ஷிப்
- காடிபாளையம்
- குதிரைபாளையம்
- பழைய மத்திகிரி
- குருபட்டி
- சொர்ணபூமி
- அச்செட்டிப்பள்ளி
- மிடுகரப்பள்ளி
- இடையநல்லுார்
- சிவக்குமார் நகர்
- கொத்துார்
- கொத்தகொண் டப்பள்ளி
- பொம்மாண்டப்பள்ளி
- முனீஸ்வர் நகர்
- ஆதவன் நகர்
- துவாரகா நகர்
- மத்தம்
- நியூ ஹட்கோ
- பழைய ஹட்கோ
- சாந்தி நகர்
- மகாலட்சுமி நகர் பகுதி -1,2
- ராம் நகர்
- பஸ் ஸ்டாண்ட்
- ஸ்ரீ நகர்
- வி.ஓ.சி., நகர்
- அப்பாவு நகர்
- காமராஜ் காலனி
- அண்ணா நகர்
- டைட்டான்
- இன்டஸ்ட்ரிஸ்
- அசோக் லேலண்ட் யூனிட்-1
- சிப்காட் ஹவுசிங் காலனி (பகுதி)
- நேதாஜி நகர்
- சின்ன எலசகிரி
- பாலாஜி நகர்
- ஆனந்த் நகர்
- சாந்தபுரம்
- அரசனட்டி
- என்.ஜி.ஜி.ஓ.எஸ் காலனி
- கே.சி.சி., நகர்
- சூர்யா நகர்
- பிருந்தாவன் நகர்
- அண்ணாமலை நகர்
- கிருஷ்ணா நகர்
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.