கணவன் - மனைவி இடையே தகராறு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள மந்திதோப்பு பகுதியைச் சேர்ந்த 60 வயது பெண் ஒருவர், கணவரை இழந்த நிலையில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். அவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மூத்த மகனான மாரி செல்வத்திற்கு கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணமாகி மனைவியுடன் வசித்து வந்த நிலையில் மற்ற இரண்டு பிள்ளைகளும் வெளியூரில் தங்கி பணியாற்றி வந்திருக்கின்றனர்.

Continues below advertisement

இந்த நிலையில் கட்டிட தொழிலாளியான மாரிச்செல்வம் தினந்தோறும் குடித்து விட்டு வந்து தகராறு செய்து வந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மாறி செல்வத்தின் மனைவி அவரை பிரிந்து கடந்த ஒரு வருடமாக தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து கோவையில் வேலை பார்த்து வந்த மாரி செல்வம் , கடந்த 5-ஆம் தேதி சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். பின்னர் தனது தாயுடன் வசித்து வந்த மாரி செல்வம் சம்பவத்தன்று இரவு வெளியே சென்று மது அருந்தி விட்டு வந்து கடும் போதையில் வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

Continues below advertisement

பெற்ற தாய்க்கு பாலியல் வன்கொடுமை

அப்போது எந்த வித காரணமும் இல்லாமல் தனது தாயுடன் தகராறில் ஈடுபட்ட மாரிச்செல்வம் அவரை சரமாரியாக தாக்கி அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மது போதையில் மனிதாபிமானமற்ற முறையில் தனது பெற்ற தாயையே பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது.

இந்தக் கொடூரத் தாக்குதலில் காயமடைந்த அந்த 60 வயது பெண்மணி, பின்னர் தனது உறவினர்கள் உதவியுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை தொடங்கினர். விசாரணையில், மது போதையில் இருந்த மாரிச்செல்வம் தனது தாயை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது.

வீட்டில் இருந்த மாரி செல்வதை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

பெற்ற தாயையே மது போதையில் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்த மகனின் இந்த மனிதாபிமானமற்ற செயல் கோவில்பட்டி பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கடும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.