விழுப்புரம் : கோட்டகுப்பம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த பெண்கள் மீது கார் மோதியதில் இருவர் சம்பவ இடத்திலே பலி மேலும் 4 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள மீனவ கிராமங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், வார விடுமுறையின் காரணமாக மீன் வாங்க அதிகமாக பொதுமக்கள் வருவது வழக்கம். இந்த நிலையில் கீழ் புத்துப்பட்டு கிழக்கு கடற்கரைச் சாலை ஓரம் புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரிகளான (பெண்கள்) ஆறு பேர் ஆட்டோவிர்க்காக சாலையோரம் நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சொகுசு கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த 6 பெண்கள் மீது பலமாக மோதியது. இதில் புதுக்குப்பம் பகுதியை சேர்ந்த லக்ஷ்மி (வயது 45) மற்றும் கோவிந்தம்மாள் (வயது 50) இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டனர். மேலும் காரில் வந்த சென்னை சேர்ந்த ஐந்து பேர் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதிகாலையில் ஏற்பட்ட விபத்தால் இரண்டு மீனவ பெண்கள் உயிரிழந்த சம்பவமாக பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


 




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்









பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண