Breaking News Live: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1597 பேருக்கு கொரோனா

Kodanad Case Hearing LIVE Updates: கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை, ஊட்டி நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

ABP NADU Last Updated: 01 Oct 2021 07:19 PM
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1597 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1597 - 25பேர் பலி

நீலகிரி: ஆட்கொல்லி புலியை கூட்டுக் கொல்ல உத்தரவு

நீலகிரி ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல உத்தரவு

நீலகிரியில் 4 பேரை கொன்ற ஆட்கொல்லி புலியான T23ஐ சுட்டுக்கொல்ல தமிழக முதன்மை வன அதிகாரி உத்தரவு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு - 4வாரத்துக்கு ஒத்திவைப்பு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆகியோரை விசாரிக்கக் கோரிய வழக்கை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய கன மழையும், மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.  

India COvid-19 Cases Updates: கடந்த 24 மணி நேரத்தில் 26,727 புதிய தொற்று பாதிப்புகள் காணப்படுகின்றன

கடந்த 24 மணி நேரத்தில் 26,727 புதிய தொற்று பாதிப்புகள் காணப்படுகின்றன. 28,246 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,75,224 ஆக உள்ளது


 

September GST Collection: 2021 செப்டம்பர் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வருவாயாக ரூ.1,17,010 கோடி வசூலாகி உள்ளது

2021 செப்டம்பர் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வருவாயாக ரூ.1,17,010 கோடி வசூலாகி உள்ளது, இதில் மத்திய ஜிஎஸ்டியாக ரூ.20,578 கோடியும் மாநில ஜிஎஸ்டியாக ரூ.26,767 கோடியும் ஐஜிஎஸ்டி ஆக ரூ.60,911 கோடியும் (இறக்குமதி பொருட்களுக்காக வசூலிக்கப்பட்ட ரூ.29,555 கோடி உட்பட) மற்றும் செஸ் வரியாக ரூ.8,754 கோடியும் (இறக்குமதி பொருட்களுக்காக வசூலிக்கப்பட்ட ரூ.623 கோடி உட்பட) வசூலாகியுள்ளது


மாநிலங்களின் ஜிஎஸ்டி வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கான இழப்பீடாக ரூ.22 ஆயிரம் கோடியையும் மத்திய அரசு விடுவித்துள்ளது.


தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வருவாய் செப்டம்பர் 2020ல் 6,454 கோடி ரூபாயாக இருந்த நிலையில் 2021 செப்டம்பரில் 21% அதிகரித்து 7,842 கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.


 

குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து

குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


பிரதமர் தனது டுவிட்டரில்; “குடியரசுத் தலைவர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது பணிவான பண்பு காரணமாக, அவர் தன்னை முழுமையாக நாட்டிற்கு அர்ப்பணித்துள்ளார். சமூகத்தில் உள்ள ஏழை மக்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினரை மேம்படுத்துவதில் அவர் செய்துள்ள பங்கு ஈடுஇனையற்றது. அவர் நீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழட்டும்.”, என்று கூறியுள்ளார்.


 

TamilNadu Weather Updates: தொடர்மழை காரணமாக திருப்பூர் மாவட்டப் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை

தொடர்மழை காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  


மீனவர்களுக்கான எச்சரிக்கை

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்த தமிழ்நாடு அரசு முடிவு

மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது.

சிவாஜி கணேசன் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்

நடிகர் திலகம் சிவாஜி கணேசணின் 94-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, அடையாறு, சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்தினார் 

இரண்டாம் கட்ட நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

தூய்மை இந்தியா இயக்கம் (நகர்ப்புறம்) 2.0 மற்றும் புதுப்பித்தல் மற்றும் நகர்ப்புற மாற்றத்துக்கான அடல் இயக்கம் (அம்ருத்) ஆகியவற்றை  பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.


கழிவுகள் இல்லாத’ மற்றும் ‘தண்ணீர் பாதுகாப்புடன்’ அனைத்து நகரங்களையும் மாற்றும் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் இந்த இரு இயக்கங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. 


2.68 கோடி தண்ணீர் இணைப்புகளை வழங்கி 4700 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100% தண்ணீர் இணைப்புகளை வழங்குவது மற்றும்  நகர்ப்புறங்களில் வசிக்கும் 10.5 கோடி மக்கள் பயனடையும் வகையில் 500 அம்ருத் நகரங்களில் சுமார் 2.64 கோடி கழிவுநீர் இணைப்புகளை வழங்கி 100% கழிவுநீர் வசதிகளை உருவாக்குவது ஆகியவை அம்ருத் 2.0 இயக்கத்தின் நோக்கமாகும்


 

அரசு தரப்பில் கூடுதல் கால அவகாசம்

கூடுதல் விசாரணைக்கு அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதால், ஒத்திவைப்பு

கோடநாடு வழக்கு அக்டோபர் 29 ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கோடநாடு வழக்கு அக்டோபர் 29 ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவிப்பு

வாளையா் மனோஜ் நீதிமன்றத்தில் ஆஜர்

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இரண்டாவது நபராக குற்றம் சாட்டப்பட்ட வாளையார் மனோஜ் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்

நீதிமன்ற வளகாத்தில் உள்ள விநாயகர் கோயிலில் சயன் வழிபாடு செய்தார்.

நீதிமன்ற வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் சயன் வழிபாடு நடத்திய பின்னர், நீதிமன்றத்திற்குள் சென்றார். 



மீண்டும் விநாயகர் கோயிலில் சயன் வழிபாடு

கடந்த முறை விசாரணைக்கு வந்த போது நீதிமன்ற வளாகத்தில் உள்ள விநாயகர் கோயிலில் சயன் வழிபாடு நடத்தினார். இன்றும் அதே கோயிலில் அவர் வழிபாடு நடத்தினார்

கூடுதல் விசாரணை அறிக்கை சமர்பிக்க வாய்ப்பு

கூடுதல் விசாரணை அறிக்கை சமர்பிக்க வாய்ப்பு. 4 வார காலத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், சாட்சிகள் என மொத்தம் 34 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

வழக்கறிஞருடன் சயன் வருகை

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ள நிலையில் இவ்வழக்கில் முதல் நபராக குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் அவருடைய வழக்கறிஞருடன் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார்.

kodanad Case Hearing Case Live Updates: சயான் வழக்கறிஞருடன் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ள நிலையில் இவ்வழக்கில் முதல் நபராக குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் அவருடைய வழக்கறிஞருடன் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார்.

Background

Kodanad Case Hearing LIVE Updates: 


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இரவில் ஆயுதங்களுடன் எஸ்டேட்டுக்குள்  அத்துமீறி நுழைந்த கும்பல், பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றது. இது தொடர்பாக சயன், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ்  உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.


கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை இன்று நடைபெறுகிறது.


 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.