செங்கல்பட்டு அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும்  புதிய புறநகர் பேருந்து முனையம் விரைவில் செயல்பாட்டிற்கு வரும் நிலையில், ஜி.எஸ்.டி- சாலை வழியாக போக்குவரத்து நெரிசலின்றி பேருந்துகள் இயக்குவது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து முனையம் பணிகள்


கிளாம்பக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் புதிய புறநகர் பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ என்று பெயரிடப்பட்டு இருக்கும் இதை வான்வழியிலிருந்து பார்த்தால் உதயசூரியன் சின்னம் போல காட்சியளிக்கும். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பெயரில் அமைக்கப்படும் பேருந்து முனையம் அடுத்த மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.


சி.எம்.டி.ஏ. ஆலோசனைக் கூட்டம்:


கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும்  புதிய புறநகர் பேருந்து முனையம் விரைவில் செயல்பாட்டிற்கு வரும் நிலையில், ஜி.எஸ்.டி- சாலை வழியாக போக்குவரத்து நெரிசலின்றி பேருந்துகள் இயக்குவது, தென்மாவட்ட பேருந்துகள் செல்ல மாற்று வழித்தடங்கள் அமைப்பது தொடர்பாக அமைச்சர் பி.கே. சேகர்பாபு தலைமையில் காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்துத்துறையுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


பின்னர், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் கூட்டம். சென்னை வெளிவட்ட சாலை வரதராஜபுரத்தில்  உள்ள தனியார் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான இடத்தினை (Omni Bus de Parking) நேரில் பார்வையிட்டு அமைச்சர் பி.கே.சேகர் பாபு கள ஆய்வு மேற்கொண்டார்.


இது தொடர்பாக அமைச்சர் பி.கே. சேகர் பாபு தெரிவித்ததாவது:


” தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டு வரும் புதிய புறநகர் பேருந்து முனையம் “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்” எனும் பெயரின் மக்கள் பயன்பாட்டிற்காக வருகின்ற ஜூன் மாதம்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.” எனத் தெரிவித்தார்.


இக்கூட்டத்தல் கூடுவாஞ்சேரியில் ரவுண்டானா அமைப்பது தொடர்பாகவும். கூடுவாஞ்சேரி, மாடம்பாக்கம் சாலை முதல் மண்ணிவாக்கம் வரை- 7 கிலோமீட்டர் நிளத்திற்கும். கண்டிகை முதல் கூடுவாஞ்சேரி வரை 18 கிலோமீட்டர் நீளத்திற்கும், நல்லம்பாக்கம் முதல் ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலை வரை - 10 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலைகளை அலைப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.