மாயனூர் கதவணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. நடப்பாண்டு குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து 12 இல் வினாடிக்கு முதலில் 3000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பிறகு 10 ஆயிரம் 12 ஆயிரம் 13 ஆயிரம் கனஅடி என தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்ததால் காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. இதனால் கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. வினாடிக்கு 9631 கன அடி தண்ணீர் வந்தது. காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 9,436 கன அடியாக குறைந்தது. குறுவை சாகுபடிக்காக காவிரி ஆற்றில் 8,716 கன அடியும், தென்கரை வாய்க்காலில் 500 கன அடியும், கீழ்கட்டளை வாய்க்காலில் 200 கன அடியும், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில் 20 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. 


 


 




அமராவதி அணை


திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு காலை வினாடிக்கு 1319 கனஅடி தண்ணீர் வந்தது. 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1402 கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. அமராவதி அணையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு 1,100 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு 440 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. 90 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் 48.72 அடியாக இருந்தது. 


நங்காஞ்சி அணை நிலவரம்
 


 


 




 


திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால் நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட நங்காஞ்சி அணையின் நீர்மட்டம் தற்போது 28.63 அடியாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


ஆத்துப்பாளையம் அணை 
 


 




 


கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே கார்வாலி ஆத்துப்பாளையம் அணைக்கு 6 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 10.72 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண