மாயனூர் அணையின் நீர்மட்டம்
கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு, வினாடிக்கு 2 லட்சத்து, 3 ஆயிரத்து 759 கன அடி தண்ணீர் வந்தது. காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு, 2 லட்சத்து, 5 ஆயிரத்து 285 கனஅடியாக தொடர்ந்து அதிகரித்தது. டெல்டா பாசன சாகுபடி பணிக்காக 2,04,065 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்கால்களில் 1220 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
அமராவதி அணையின் நீர்மட்டம்
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு காலை, 6 மணி நிலவரப்படி வினாடிக்கு, 1591 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு 167 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்கால்களில் 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 78.81 அடியாக இருந்தது. அமராவதியில் கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 602 கன அடி தண்ணீர் வந்தது.
நங்காஞ்சி அணையின் நீர்மட்டம்
திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 39.37 கன அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 32.81 கன அடியாக இருந்தது.
ஆத்துப்பாளையம் அணையின் நீர்மட்டம்
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு, 52 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 20.66 அடியாக இருந்தது. அணையில் இருந்து, நொய்யல் ஆற்றில் தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் மழையின் நிலவரம்
கரூர் மாவட்டத்தில், காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் குளித்தலையில் மட்டும் 12 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.