கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட 14வது வார்டு கவுன்சிலர் லதா வேலுசாமி, முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான  எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் தன்னை  அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.  இந்நிகழ்ச்சியில் தோகைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் ரெங்கசாமி, தோகைமலை ஒன்றிய குழு பெருந்தலைவர் லதா ரங்கசாமி மற்றும் மாவட்ட கழக இணை செயலாளர் மல்லிகா சுப்பராயன், மாவட்ட இளைஞரணி பாசறை செயலாளர் கமலக்கண்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் தானேஷ் ( எ) முத்துக்குமார், மாவட்ட கவுன்சிலர் வசந்தா பழனிசாமி, ஒன்றிய கவுன்சிலர் முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



கரூரில் ஆதி திராவிடர் நல மாணவியர் விடுதியில் சுகாதார சீர்கேடு.


கரூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் விடுதி கண்காணிப்பாளருக்கு சட்டமன்ற கணக்கு குழு தலைவர் எச்சரிக்கை விடுத்தார். தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொது கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்ட 5 சட்டமன்ற உறுப்பினர்கள் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். கரூர், தான்தோன்றிமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி, பயின்று வரும் விடுதி கட்டடங்கள், ஜன்னல், கதவுகள் சரியான பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்தும், சுகாதார சீர்கேடு நிலவி வரும் காரணத்தினால் விடுதி கண்காணிப்பாளர் இந்திரா காந்தியை கடுமையாக கண்டித்தார்.




 


ஆய்வுக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக குறைகளை சரி செய்து காண்பிக்க வேண்டும் எனவும், இல்லையெனில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தாஜுதீன் மற்றும் விடுதி கண்காணிப்பாளர் இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்படும் எனவும் கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகை எச்சரிக்கை விடுத்தார். இந்த ஆய்வு நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.




 


புகழூர் நகராட்சி கூட்டம்.


புகழூர் நகராட்சி கூட்டம் நடந்தது. நகராட்சி தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் பிரதாபன் முன்னிலை வகித்தார். கனிராஜ் வரவேற்றார். இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வார்டு குலுக்கல் அமைக்கவும் பகுதி சபாக்கள் ஏற்படுத்தவும் மன்றத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பகுதி சபாக்களுக்கான உறுப்பினர்ளுக்கு மன்றம் நியமித்துக் கொள்ளவும், அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த நகராட்சி பகுதிகளில் உள்ள 24 வார்டுகளுக்கும் 96 பகுதி சபாக்கள் மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. மறு வரையறை செய்யப்பட்ட 96 பகுதி சபாக்களுக்கு, பகுதி சபா உறுப்பினர்களை நியமனம் செய்ய மன்றம் ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஒவ்வொரு வார்ட்டுக்கும் அந்தந்த பகுதி வார்டு உறுப்பினர்கள் வார்டு குழு தலைவராகவும், அந்த பகுதியை சேர்ந்த நாலு பேர் நியமன உறுப்பினர்களாகவும் நியமிக்கப்படுவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.