கரூர் அருகே சுக்காலியூரில் கழிவுநீர் தொட்டியில் விழுந்த 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி  உயிரிழந்தனர். 


சுக்காலியூர் அருகே புதிய கட்டிட வேலை நடைபெற்று வந்த நிலையில் சாரம் அவுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி கழிவு நீர் தொட்டியில் விழுந்தார். அவரைக் காப்பாற்ற சென்ற இரண்டு கட்டிட தொழிலாளியும் கழிவுநீர் தொட்டியில் விழுந்தனர். அப்போது  விஷவாயு தாக்கியது. 


தகவல் அறிந்த வந்த தீயணைப்பு வீரர்கள் மூவரையும் மீட்டு தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், சிகிச்சை பலனின்றி மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் நடந்த இடத்தில் காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.