மாண்புமிகு பொதுப்பணித்துறை (கட்டடங்கள்), நெடுஞ்சாலைகள்  மற்றும்  சிறு துறைமுகங்கள் அமைச்சர் திரு.ஏ.வ.வேலு அவர்கள் மற்றும்  மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V செந்தில்பாலாஜி அவர்கள் கரூர் திருவள்ளுவர் மைதான திடலில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் "ஓயா உழைப்பின் ஓராண்டு - கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி " என்ற தலைப்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக்கண்காட்சியினை  தொடங்கி வைத்தார். 


 




 


அதனைத் தொடர்ந்து 6-ஆம் நாள் நிகழ்ச்சியாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவியின் பரதநாட்டியம், நடனம், கீ போர்டு, சிலம்பம் மற்றும் குழு நடனமும், மலைக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் நடனமும், மற்றும் குழு நடனமும் அரவக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியின் நடனமும், கே. சீத்தப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், கிராமிய நடனமும் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.




 


இந்நிகழ்வில் அரவக்குறிச்சி வட்டார கல்வி அலுவலர் திரு சதீஷ்குமார், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் திருமதி.லதா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.


தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி.


 கரூர் மாவட்டம் கடவூர் அருகே தரகம்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக அரசின் வழிகாட்டுதல் படி தியாகிகள் தினத்தை ஒட்டி தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்தியாவில் சுதந்திரம் பெறுவதற்காக போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30 ஆம் தேதி அன்று தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தரகம்பட்டியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர்  நளினி தலைமை வகித்தார், இதில் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இரண்டு நிமிடம்  அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் இந்திய அரசியலமைப்பின் இடைவிடாத உள்ளம் சார்ந்த மற்ற உள்ள இந்திய குடிமகன்


 




 


ஆகிய நான் நமது அரசியல் அமைப்பின்படி தீண்டாமை ஒடுக்கப்பட்டு விட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு எவர் மீதும் தெரிந்து தெரியாமலே சமூக வேற்றுமையை மனம் வாக்கு செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்க மாட்டேன் அரசியல் அமைப்பின் அடிப்படை கருத்திருக்கிணங்க சமய வேறுபாடு சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும் உண்மையுருடன் பணியாற்றுவது எமது கடமையாகும் என்பதை உணர்வேன். மேலும் இந்திய அரசியலமைப்பின் பால் எனக்குள்ள முழு பற்று இருக்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்கும் என்றும். இதனால் உளமாற உறுதியளிக்கிறேன் என்று பேராசிரியர்கள் மாணவ மாணவியர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் கோவிந்தசாமி உள்பட பேராசிரியர்கள் கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.