கரூரில் ஒரே நேரத்தில் 11  திருப்பதிகம்  பாடல்களை 15000 முறை பாடி தனியார் பள்ளியை சேர்ந்த தமிழ் இசை படிக்கும் 1250 மாணவ, மாணவிகள்  அசத்தியுள்ளனர். ஆன்மீக பக்கர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியன் நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் உலக சாதனையில் இடம் பெற்றுள்ளது .

Continues below advertisement


 




 


கரூர் மகா அபிஷேக குழு சார்பில் 25 -வது ஆண்டு தெய்வ திருமண விழா கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற உள்ளது. ஒரு பகுதியாக கரூர் பரணி பார்க் பள்ளியில் தமிழ் இசை படிக்கும் 1250 மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து திருக்கருவூர் பதிகம் என்ற திருஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகம் 11 பாடல்களை ஒவ்வொரு மாணவ மாணவிகளும் 1.15 மணி நேரத்தில் 12 முறை பாடி மொத்தம் 15000 முறை பாடி அசத்தி உள்ளனர்.


 




 


கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நால்வர் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, உலக நன்மை வேண்டி முப்படை நன்றாக இருக்க வேண்டும் என திருஞான சம்பந்தர் அருளிய இரண்டாம் திருமுறை திருப்பதிகமான தொண்டலாம் மலர் தூவி என தொடங்கும் திருப்பதிகம் 15000 முறை பாடி அசத்தி உள்ளனர். தனியார் பள்ளி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வு ஆன்மீக பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது. ஆன்மிக நிகழ்வு இந்தியன் நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் உலக சாதனை பதிவில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.