கரூர் கூட்டநெரிசலில் சம்பவத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய விவகாரத்தில் தவெக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஷை கைது செய்யப்பட்டுள்ளார், அதே போல் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட கரூர் தவெக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை சிறப்பு புலனாய்வு குழு இரண்டு நாள் விசாரிக்க நீதிமன்றம், அனுமதி வழங்கியுள்ளது.
கரூர் துயர சம்பவம்:
தவெக தலைவர் விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்கி சனிக்கிழமைத்தோறும் பரப்புரையை மேற்க்கொண்டு வந்தார், தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி தொடங்கி 3 வாரங்களாக 6 மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் சென்று தனது தொண்டர்களையும் பொது மக்களையும் சந்தித்து வந்தார். இந்த பேரணிகள் மக்களிடையே வரவேற்பைப் பெற்று வந்தன.
இதில் துரதிருஷ்டவசமாக கரூரில் கடந்த செபம்டம்பர் 27 ஆம் தேதி நடந்த பரப்புரையில் அவர் பேசிக் கொண்டிருந்தபோது கூட்ட நெரிசல் காரணமாக ஏற்பட்ட மூச்சுத் திணறலால் 41 பேர் பரிதாபமாக பலியாகினர். பெண்கள், குழந்தைகள் உட்பட பல தரப்பினரும் உயிரிழந்த நிலையில், இது நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தலைமறைவான தலைவர்கள்;
இந்த சம்பவத்தை அடுத்த விஜய் உடனடியாக சென்னை திரும்பினார், இரண்டாம் கட்டத்தலைவர்கள் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உட்பட அனைவரும் தலைமறைவாகினர், இதனை அடுத்து இந்த துயர்ச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க விசாரணை குழு தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டு விசாரணை நடைப்பெற்று வருகிறது. இதற்கிடையில் இந்த சம்பவத்துக்கு காரணத்தை கண்டறிய பல பொது நல வழக்குகளும் தொடரப்பட்டது.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது கைது
இதற்கிடையில் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளரான மதியழகன் தலைமறைவாகி இருந்த நிலையில் போலீசார் அவரை கைது செய்து நீதிமன்ற் காவலில் எடுத்தனர்,
அதே போல் சம்பவத்தன்று பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக சம்பவம் நடந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்று வந்துள்ளது, இதனை பார்த்த தவெகவை சேர்ந்த சிலர் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியுள்ளனர், இதனை அடுத்து பாதிக்கப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்..
சிறப்பு விசாரணைக்குழு:
கரூர் சம்பவத்தை தீவிரமாக விசாரிக்க ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவானது அமைக்கப்பட்டு விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து இந்த சிறப்பு விசாரணைக் குழுவினர் கரூரில் சம்பவம் நடந்த இடத்திலும் பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட செயலாளர் கைது:
இந்த நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்குதல் விவகாரத்தில் தவெக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கெடேஷ் தான் தாக்கியுள்ளார் என்பது SIT விசாரணையில் தெரியவந்த நிலையில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்
மேலும் ஏற்கெனவே காவலில் உள்ள கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை சம்பவம் தொடர்பாக விசாரிக்க நீதிமன்றத்தில் சிறப்பு விசாரணை குழுவினர் அனுமதி கேட்டிருந்த நிலையில் நீதிமன்றமானது மதியழகனை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.