கரூரில் நடந்த துயர சம்பவத்திற்கு பிறகு விஜய்  தலைவர் பிச்சை இன்று அறிக்கை வெளியிட்ட நிலையில் அந்த அறிக்கையில் மன்னிப்பு என்ற வார்த்தை கூட இல்லை என்று விஜய் வெளியிட்ட அந்த அறிக்கையின் கீழ் இணையவாசிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Continues below advertisement

கரூர் துயர சம்பவம்; 

தவெக தலைவர் விஜய் சனிக்கிழமை தோறும் தனது அரசியல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார் இந்த நிலையில் நேற்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்திற்கு தனது பரப்புரையை மேற்கொண்டார்.

நாமக்கலில் காலை 8.45 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய பரப்புரை மதியம் 2:30 மணி அளவில் தான் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் சொல்லப்படுவது என்னவென்றால் விஜய் சென்னையில் இருந்தே காலை 8:00 மணிக்கு தான் கிளம்பியதுதான்.

Continues below advertisement

 நாமக்கலில் பரப்பரையை முடித்துவிட்டு அடுத்ததாக கரூருக்கு சென்றார் விஜய். கரூரில் நண்பகல் 12 முக்கால் மணிக்கு தொடங்க வேண்டிய பரப்புரை இரவு 7 மணிக்கு தான் தொடங்கியது கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் தாமதத்திற்கு பிறகு விஜய் பரப்புரையை தொடங்கினார். இதனால் அப்பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் நெரிசலில் சிக்கியதில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 50-க்கும் மேற்ப்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மன்னிப்பு எங்கே? உயிர் திரும்ப வருமா?

இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் இந்த நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு 20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 2 லட்சமும் நிவாரணமாக அறிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டார். ஆனால் அந்த பதிவில் மன்னிப்பு என்கிற வார்த்தையே இல்லை என்று பதிவின் கீழ் கமெண்ட் செய்து வருகின்றனர். 

”ஒரு மன்னிப்பு அப்படின்ற ஒரு வார்த்தை கூட இல்லையே சார், நிவாரணம் அறிவிச்சா போதுமா சார், உயிர் போயிருக்கே சார். சொல்லுங்க சார் பனையூர் பண்ணையார் சார்.”

மேலும்” 20 லட்ச ரூபாய் ஒரு தொகையா..? உன்னை நேரில் பார்க்க வந்தவர்கள் தானே..கரூர் மக்களை ஏன் மருத்துவமனையில் பார்க்கவில்லை.. உயிரெழுந்த அந்த குடும்பத்திற்கு ஏன் ஆதரவு தெரிவிக்கவில்லை..? நள்ளிரவில் வந்து மக்களை பார்த்து இருக்கலாமே.. இரத்தக் கரைகளை எப்பொழுதும் உன்னால் அடிக்க முடியாது..

6 மணி தாமதம், பாதுகாப்பில்லாத கூட்டம் = 39 உயிரிழப்பு. 20/2 லட்சம் கொடுத்தால் உயிர் திரும்பாது. பொய்யான பாசமொழிகள் விட்டு, பொறுப்பு ஏற்று மன்னிப்பு கேட்கவும், தலைவராக தைரியமான நடவடிக்கை காட்டவும். இதுதான் நேர்மையான செயல்.