கரூர் துயர சம்பவத்தில் தவெக தலைவர் விஜய்க்கு தலைமை பண்பே இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார்.
கரூர் சம்பவம்:
கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் விஜயின் பரப்புரை கூட்டத்தில் நடந்த கூட்ட நெரிசல் துயர சம்பவத்தில் 41 உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனை அடுத்து சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர் அரசியல் கூட்டங்களுக்கு நெறிமுறைகளை வகுக்க வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார்.
விஜய்க்கு தலைமை பண்பு இல்லை:
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின் கருத்து தெரிவித்த நீதிபதி செந்தில் குமார் “ கரூர் துயர சம்பவம் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு (Man made disaster) நிகழ்ந்துள்ளது. என்ன மாதிரியான கட்சி இது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தவெக கட்சிக்கு என்ன தடையாக இருந்தது?ஏற்பாட்டாளர்கள், தலைவர், தொண்டர்களை, ரசிகர்களை, மக்களை கைவிட்டு பொறுப்பற்ற முறையில் வெளியேறியுள்ளனர், இந்த நிகழ்ச்சியின் தலைவர் மொத்தமாக மறந்து விட்டார். சித தஒரு அரசியல் கட்சியின் இத்தகைய செயலை நீதிமன்றம் கடுமையாக கண்டிக்கிறது.சம்பவத்திற்காக வருத்தம் கூட தெரிவிக்காததே கட்சித் தலைவரின் மனநிலையை காட்டுகிறது”தலைமைத்துவ பண்பே இல்லை. மக்களை, குழந்தைகளை மீட்டு இருக்க வேண்டும், அதை செய்யாமல் சம்பவத்துக்கு பொறுப்பேற்காத த.வெ.க.வின் செயலுக்கு நீதிபதி செந்தில்குமார் கண்டனம் தெரிவித்தார்.
சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு:
மேலும் இந்த சம்பவத்தை விசாரிக்க ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.கரூர் மாவட்ட எஸ்.பி.யை குழுவில் இணைத்தும், ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்கவும் கரூர் போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் நடந்து முடிந்த பின்பு பிரதமர் முதல் முதல்வர் வரை அனைவரும் இதற்காக வருத்தம் தெரிவித்தனர், அனைத்து கட்சியினரும் கட்சி பேதம் இன்றி மக்களை மீட்ட நிலையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த கட்சியினர் மொத்தமாக வெளியேறி இருக்கிறார்கள்
ஏன் வழக்கு போடவில்லை:
“விஜய் பிரச்சார வாகனத்தில் மோதி இருசக்கர வாகனங்கள் விபத்துக்கு உள்ளானதாக வீடியோ காட்சிகள் உள்ளது. இந்த விவகாரத்தில் விஜய் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா, ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை. புகார் இல்லை என்றாலும் வழக்கு பதிவு செய்ய வேண்டும், வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் ஏதேனும் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என நினைக்கிறீர்களா? பேருந்து மோதியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யாவிட்டால் மக்கள் எப்படி நம்புவார்கள். நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கருணை காட்டுகிறீர்களோ?சட்டத்திற்கு முன் அனைவரும் சமம், அரசு அமைதியாக இருக்க கூடாது என்றார்.