பொதுப்பணித்துறை (கட்டடங்கள்), நெடுஞ்சாலைகள்  மற்றும்  சிறு துறை முகங்கள் அமைச்சர் ஏ.வ.வேலு மற்றும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் V செந்தில்பாலாஜி கரூர் திருவள்ளுவர் மைதான திடலில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் "ஓயா உழைப்பின் ஓராண்டு - கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி " என்ற தலைப்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக்கண்காட்சியினை தொடங்கி வைத்தார்கள். 
 




அதனைத் தொடர்ந்து 8-ஆம் நாள் நிகழ்ச்சியாக பள்ளிக்கல்வித்துறை குளித்தலை ஊராட்சி ஒன்றியம் கடம்பநேஸ்வரர் நடுநிலைப்பள்ளி மாணவியர்களின் கிராமிய நடனம், வைபுதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களின் வில்லுப்பாட்டு, குழு நடனம், தனி நபர் நடிப்பு சிவாயம் மேற்கு ஐயர் மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களின் தனி நடனம் மற்றும் குழு நடனம்,


 




குளித்தலை மாரியம்மன் கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களின் கரகாட்டம், கும்மி பாட்டு மற்றும் மனிதநேய பாடல், குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களின் தனி நடனம் மற்றும் கதை சொல்லுங்கள், குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர்களின் பரதநாட்டியம், தனி நடனம் மற்றும் கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. போன்ற கலை நிகழ்ச்சிகள்  நடைபெற்றது.


 




இந்நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் சக்திவேல்,  குளித்தலை வட்டார கல்வி அலுவலர் ராணி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராகுகாலம், கலைத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் செல்வி நிகிலா, ஆசிரியர் பயிற்றுனர் சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.