அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடையூர், நாகம்பள்ளி, சேந்தமங்கலம் (கிழக்கு) மற்றும் சேந்தமங்கலம் (மேற்கு) ஆகிய ஊராட்சிகளில் இன்று ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். 




அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடையூர் ஊராட்சியில் உள்ள 5 ரோடு பகுதிகளில் 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.8.88 இலட்சம் மதிப்பீட்டில் 1,00,000 கொள்ளளவு கொண்ட முடிவுற்ற தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி பணிகளை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து  திட்டங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து கொடையூர் ஊராட்சி, மலையூர் பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1.70 இலட்சம் மதிப்பீட்டில் விவசாய நிலங்களில் மண்வரப்பு அமைக்கும் பணிகளையும், தொடர்ந்து நாகம்பள்ளி ஊராட்சியில் மலைக்கோவிலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.4.10 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கழிப்பறை கட்டிடம் நடைபெற்று வரும் பணிகளையும், தொடர்ந்து பள்ளி நூலகம் மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை கேட்டறிந்தார்.




மேலும்,  சேந்தமங்கலம் (கிழக்கு) ஊராட்சியில் குரும்பபட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3.59 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், பழனிகவுண்டன்வலசு கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.59 இலட்சம் மதிப்பீட்டில் உலர்களம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், குறிக்காரன்வலசு, கருப்பாப்பிள்ளைபுதூர் ஆகிய கிராமத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.59 மற்றும் ரூ.5.08 இலட்சம் மதிப்பீட்டில் சமத்துவ மயானம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும் மற்றும் ராயகவுண்டன்வலசு பகுதிகளில் ரூ.4.80 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலை நடைபெற்று வரும் பணிகளையும் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் அறிவுறுத்தினார்கள். 





இவ்விழாவில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், அரவக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி, பாலச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் பூர்ணதேவி, ஒன்றியப் பொறியாளர்கள் ஜெகதீசன், குமரேசன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.