புகைப்படக்கண்காட்சி 9-ஆம் நாள் நிகழ்ச்சி.


 





 


பொதுப்பணித்துறை (கட்டடங்கள்), நெடுஞ்சாலைகள்  மற்றும்  சிறு துறை முகங்கள் அமைச்சர் ஏ.வ.வேலு மற்றும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் V செந்தில்பாலாஜி கரூர் திருவள்ளுவர் மைதான திடலில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் "ஓயா உழைப்பின் ஓராண்டு - கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி " என்ற தலைப்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக்கண்காட்சியினை (25.01.2023)அன்று தொடங்கி வைத்தார்கள். 




அதனைத் தொடர்ந்து 9-ஆம் நாள் நிகழ்ச்சியாக பள்ளிக்கல்வித்துறை காந்தி கிராமம் காலனி அரசு நடுநிலைப்பள்ளி மாணவியின் பரதநாட்டிய நடனமும், மணவாடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மெல்லிசை பாடலும், ஆச்சி மங்கலம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவியின் தனி நடனமும், காந்திகிராமம் காலனி அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களின் குழு நடனமும், குமாரபாளையம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களின் தேவராட்டமும், தொழில்பேட்டை டாட் அமைப்பு மூலம் மாணவர்களின் சிலம்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள்  நடைபெற்றது.




நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் திருமதி. கௌரி, கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் திரு. சரவணன், வட்டார வளமையர் மேற்பார்வையாளர் திரு. செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண