கரூர் வணிகவரித்துறை அலுவலகத்தில் மனு.




வணிகவரித்துறையில் நடைமுறையில் உள்ள டெஸ்ட் பர்சேஸ் முறையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து ஆறு மாத காலத்திற்குப் பிறகு செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் கரூர் வணிகவரித்துறை அலுவலகத்தில் மனு அளித்தனர்.


வணிகவரித்துறையில் கடந்த மார்ச் மாதத்தில் சில்லறை கடைகளில் ஆய்வு செய்வது சம்பந்தமாகவும், டெஸ்ட் பர்சேஸ் செய்வது சம்பந்தமாகவும் அறிவிப்புகள் வெளியான போது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழக அனைத்து வணிகர்களின் சார்பாக கருத்துகளையும், எதிர்ப்பையும் பதிவு செய்திருந்தது. 


டெஸ்ட் பர்சேஸ் முறையில் வணிகர்களிடம் பொருட்கள் வாங்கப்பட்டு அதற்கு அபராதமாக 20,000 வரை வசூலிப்பதாக வணிகர் சங்கங்கள் சார்பாக தொடர் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. பொருட்களுக்கான உரிய வரியை செலுத்தி அதன் பின்னரே பொதுமக்களுக்கு விற்பனை செய்கிறார்கள். ஆனால், டெஸ்ட் பர்சேஸ் முறையில் பொருட்களை வாங்கி அதற்கு ரசீது அளிக்கப்படவில்லை என்று கூறி, அபராதம் விதிக்கும் முறை ஏற்புடையதல்ல. இது சிறு, குறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்குகிறது. 




வரி ஏய்ப்பில் ஈடுபடுகின்ற உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர்கள், கனரக வாகன உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து வரி ஏய்ப்பை முழுமையாக தடுத்திட வேண்டும். அதற்காக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு துணை நிற்கும். எனவே, அதனை உறுதி செய்து சிறு, குறு வணிகர்கள் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஆறு மாதங்கள் டெஸ்ட் பர்சேஸ் நடைமுறையை நிறுத்தி வைத்து, வணிகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன் பிறகு படிப்படியாக இந்த நடைமுறையை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் நூற்றுக்கணக்கானோர் கரூர் வணிகவரித்துறை அலுவலகத்தில் துணை ஆணையரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.




மாணவர்கள் வைத்த கோரிக்கையை 10 நிமிடத்தில் நிறைவேற்றிய மாமன்ற உறுப்பினரின் நிகழ்ச்சியான நிகழ்வு.


கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டு பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளில் திமுக வெற்றி பெற்று அதிக அளவில் திமுக மாமன்ற உறுப்பினர்கள் சிறப்பான முறையில் பணியாற்றி வருகின்றனர். இதில் குறிப்பாக கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 31 வது வார்டு பகுதியான சின்ன ஆண்டாள் கோவில் பகுதியில் மான்ற உறுப்பினர் சாந்திபாலாஜி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது அப்பகுதி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மாமன்ற உறுப்பினரிடம் தாங்கள் விளையாட போதுமான வசதி இல்லை எனவும், அமராவதி ஆற்றில் சில இடங்களில் அதிக குப்பை தேங்கி இருப்பதாகவும் கோரிக்கை வைத்தனர் கோரிக்கை வைத்த 10 நிமிடத்தில் மாமன்ற உறுப்பினர் சாந்தி பாலாஜி மாணவர் வைத்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி மாணவர்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளார்.




அதேபோல் இளைஞர்கள் வைத்த கோரிக்கையான அமராவதி ஆற்றின் குப்பையை அகற்றும் பணியில் தானே முன் நின்று பணி முடியும் வரை அங்கிருந்து குப்பையை அகற்றிய பிறகு அடுத்த பணிக்கு சென்றார். மாமன்ற உறுப்பினர் சிறப்பான முறையில் மக்கள் பணியாற்றி இருப்பது அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மாமன்ற உறுப்பினரின் சிறப்பான பணியை பாராட்டும் விதமாக மாணவர்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.