கரூர் அருகே, பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு, மழை காரணமாக மீண்டும் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு காலை, 6:00 மணி நிலவரப்படி, வினாடிக்கு, 92 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 725 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 81.70 அடியாக இருந்தது. அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் குறைக்கப்பட்டதால், கரூர் அருகே பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு கடந்த 29 ஆம் தேதி முதல் தண்ணீர் வரத்து இல்லாமல் இருந்தது. இந்நிலையில், ஆற்றுப்பகுதியில் பெய்த மழை காரணமாக காலை ஆறு மணி நிலவரப்படி பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு 185 கன அடி தண்ணீர் வந்தது.
காவிரி ஆற்றில், மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு, 14 ஆயிரத்து, 792 கன அடி தண்ணீர் வந்தது. காலை 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 14 ஆயிரத்து, 976 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. டெல்டா பாசன பகுதிக்கு குருவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில், 13 ஆயிரத்து, 976 கன அடி தண்ணீரும், நான்கு வாய்க்காலில், 1,120 தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு, வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், காலை நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம் 32.87 கனஅடியாக இருந்தது.
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி அணைக்கு, வினாடிக்கு, 63 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 21.64 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், வினாடிக்கு 104 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் காலை, 8:00 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில், கரூரில் மட்டும், 1.4 மி. மீ., மழை பெய்தது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்