அமராவதி ஆற்றில் பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு நீர்வரத்து நின்றது.
அமராவதி ஆற்றில் இருந்து, ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால், பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால், அணையிலிருந்து ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு, 250 கனஅடியாக குறைக்கப்பட்டது. கரூர் அருகே, பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு வந்த தண்ணீர் முற்றிலும் நின்றது.
இதனால், தடுப்பணை பகுதிகளில் பாறைகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. மேலும் அமராவதி அணையில் இருந்து புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 63.13 அடியாக இருந்தது. அமராவதி அணைக்கு காலை வினாடிக்கு, 45 கன அடி தண்ணீர் வந்தது. காவிரி ஆற்றில், மாயனூர் கதவணைக்கு ,வினாடிக்கு, 2,219 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6 மணி நிலவரப்படி, வினாடிக்கு 2,916 கண்ணாடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. அந்த தண்ணீர் முழுவதும் குடிநீர் தேவைக்காக ஆற்றில் திறந்து விடப்பட்டது.
கா. பரமத்தியில் கார்வாலி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து நின்றது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 15 புள்ளி 31 அடியாக இருந்தது. இதனால், நொய்யல் பாசன வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.