வெடி வைத்ததில் கூலி தொழிலாளர்கள் மயக்கம் மற்றும் மின் கம்பங்கள் சேதம்


கடவூர் அருகே தனியார் சிமெண்ட் தொழிற்சாலைக்கு சொந்தமான சுண்ணாம்பு கல்குவாரியில் வெடி வைத்ததில், தொழிற்சாலைக்கு அருகே விவசாய நிலத்தில் வேலை பார்த்து வந்த பெண்கள் மீது விழுந்த கற்களால் 10க்கும்  மேற்பட்ட விவசாய கூலி தொழிலாளர்கள் மயக்கம் மற்றும் மின் கம்பங்கள் சேதமடைந்தன.




கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி மேலப்பகுதி வீரகவுண்டன்பட்டி கிராமத்தில் தனியார் (புலியூர் செட்டிநாடு சிமெண்ட்) நிறுவனத்திற்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் குவாரி செயல்பட்டு வருகிறது.


இந்நிலையில் அந்த கல் குவாரி அருகே ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள விவசாய நிலங்களில்  விவசாயிகள் வேலை பார்த்து வந்துள்ளனர். மதியம் கல்குவாரியில் வெடி வைத்த போது சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள விவசாய நிலத்தில் வேலை பார்த்து வந்த பெண்கள் மீது கற்கள் விழுந்துள்ளது. விவசாய நிலத்திற்கு அருகே இருந்த  மின் கம்பங்கள் மீது சுமார் 20 கிலோ முதல் 30 கிலோ எடை கொண்ட கற்கள் விழுந்துள்ளது.




இதில் ஒரு சிலர் லேசான காயமடைந்த பெண்கள் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அங்கு வேலை பார்த்து வந்த பத்துக்கு மேற்பட்ட விவசாய கூலித் தொழிலாளி பெண்கள் மயக்கமடைந்தனர். அந்த கல் குவாரி அருகே உள்ள விவசாய நிலத்தில் கற்கள் விழுந்ததில் மின்கம்பங்கள் சேதமடைந்தது. தொடர்ந்து தற்போது வரை அந்த பகுதி மக்கள் விவசாய நிலத்திற்கு கூட செல்ல முடியாத சூழ்நிலையில் அச்சத்தில் உள்ளனர்.


தகவல் அறிந்து வந்த குளித்தலை ஆர்.டி.ஓ புஷ்பா தேவி தலைமையிலான அதிகாரிகள் வந்து நேரில் பார்வையிட்டு மறு உத்தரவு வரும் வரை கல்குவாரி செயல்படக்கூடாது என உத்திரவிட்டுள்ளதாக தெரிகிறது. அப்பகுதியை சுற்றியுள்ள ஐந்துக்கு மேற்பட்ட கிராம மக்கள் தொடர்ந்து இதே போல் அச்சத்தில் உள்ளனர்.


விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். மேலும், சில விவசாயிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆதலால் அப்பகுதி மக்கள் அந்த விவசாய நிலத்திற்கு செல்ல தயக்கமடைகின்றனர். இதுபோன்று இனிமேல் நிகழாமல் இருக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். விவசாயிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதால் எந்த பிரச்சினையும் இல்லை.





இனிமேல் இதுபோன்ற சம்பவத்தால் யாரும் பாதிக்காமல் இருக்க அதற்கு ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அங்குள்ள விவசாய நிலங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.