கரூரில் அரசு பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக பயணி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நடத்துனர் பாதி வழியில் பேருந்தில் இருந்து இறங்கி சாலையோர மரத்தின் கீழ் அமர்ந்திருந்த ஓட்டுநர் வீடியோ வைரலாகி வருகிறது.


கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே ஓசூரில் இருந்து மதுரை செல்லும் அரசு பேருந்தில்  பயணி ஒருவர் கரூரில் இருந்து திண்டுக்கல் செல்வதற்காக ஏறியுள்ளார். அப்போது 62 ரூபாய் கட்டணத்துக்கு பதிலாக கண்டக்டர் 70 ரூபாய் வசூலித்ததாக கூறி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நடத்துனர் அதியமான் பேருந்தை சாலை ஓரம் நிறுத்திவிட்டு, ஒரு மரத்தின் கீழே அமர்ந்ததை சக பயணி ஒருவர் வீடியோவாக வலைத்தளத்தில் பதிவிட்டதால் வைரலானது.  இது தொடர்பாக சேலம் கோட்ட மேலாளரிடம் விளக்கம் கேட்டபோது, திண்டுக்கல்-கரூர் தடத்தில் எக்ஸ்பிரஸ் பேருந்தில் 62 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், 1 to 1 பேருந்தில் 70 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.



அரசு பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூல்... பேருந்தில் இருந்து இறங்கி டிரைவர் செய்த வேலை


பயணி எக்ஸ்பிரஸ் பேருந்து என நினைத்து கூடுதல் கட்டணம் வசூலித்ததாக பிரச்சனை செய்ததோடு, அரசாணையை காட்டச் சொல்லி வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் பேருந்தை நடத்துனர் நிறுத்திவிட்டு, சாலை அருகில் உள்ள மரத்தின் கீழ் உட்கார்ந்துள்ளார். இதன் பிறகு சக பயணிகள் இருவரையும் சமரசம் செய்ததை தொடர்ந்து, பேருந்து தொடர்ந்து இயக்கப்பட்டது என கோட்ட மேலாளர் தகவல் தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.