மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் இருக்கும் நிலையில், மின் இணைப்பை துண்டித்த வீட்டின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் வாடகைதாரர் புகாரளித்தார்.


 




கரூர் தான்தோன்றிமலை அருகே உள்ள சத்தியமூர்த்தி நகர் 6வது தெருவில், அமைந்துள்ள சிவகாமி காளிதாஸ் என்பவரது வீட்டில் வாடகைக்கு, குடியிருந்து வரும் பூங்கொடி மற்றும் செல்வராஜ் ஆகியோர் குடும்பத்துடன், கடந்த 8 மாதங்களாக வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் மாதாமாதம், வீட்டு வாடகை ரூபாய் 4750 செலுத்தி வந்துள்ளனர். மேலும் பூங்கொடி செல்வராஜ் குடியிருக்கும் வீட்டுக்கென தனி மின் இணைப்பு உள்ளது. இதற்கான இந்த மாத மின் கட்டணம் ரூபாய் 2206 செலுத்த ஜனவரி 18 ஆம் தேதி கடைசி நாளாக உள்ளது.


 




இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் ஜனவரி 5ஆம் தேதியே மின் இணைப்பின் பீஸ் கேரிலை பிடுங்கி மின்கட்டணத்தை செலுத்த வேண்டும் என மின் இணைப்பை துண்டித்து விட்டார். இதனால் கடந்த மூன்று நாட்களாக பத்தாம் வகுப்பு படிக்கும் தனது மகன் இரவு நேரத்தில் பள்ளி பாடங்களை படிக்க முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதால் ஜனவரி எட்டாம் தேதி திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் பூங்கொடி தான்தோன்றி மலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் பூங்கொடி அளித்த பேட்டியில், தான்தோன்றி மலை சத்தியமூர்த்தி நகர் ஆறாவது கிராசில் வாடகைக்கு குடியிருக்கும் தனக்கு, வீட்டின் உரிமையாளர் சிவகாமி காளிதாஸ், மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் இருக்கும் பொழுது, உடனடியாக மின் கட்டணத்தை வழங்க மறுத்ததால் மின் இணைப்பை துண்டித்து விட்டார். இதுதொடர்பாக தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டின் உரிமையாளர் தன்னை வீட்டை காலி செய்ய வேண்டும் என கூறுவதால் குடும்பத்துடன் தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் உரிய நடவடிக்கையை கோரி காத்திருப்பதாக கூறினார்.


 




இதனைத் தொடர்ந்து சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்த போலீசார், பாதிக்கப்பட்ட பெண்மணி குடும்பத்துடன் பதினொன்றாம் வகுப்பு மாணவன் இருட்டில், தவிர்த்து வருவது குறித்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் இரவு 11 மணிக்கு மேல் குடியிருக்கும் வீட்டின் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்மணியின் கோரிக்கையை ஏற்க மறுத்த, கல்லூரி பேராசிரியரும் அவரது மனைவியும் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் மக்களின் குறைகளை போக்க காவல்துறை மெத்தனம் காட்டியதால், ஒரு குடும்பமே இருட்டில் வீட்டில் உறங்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். இதுகுறித்து கல்லூரி பேராசிரியர் மனைவி சிவகாமியை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, மின் கட்டணம் செலுத்தினால் மட்டுமே மின்சாரம் வழங்க முடியும் என கரராக கூறிவிட்டு போனை வைத்து விட்டார்.