கரூரில் பொதுமக்கள் வைத்த கோரிக்கைகளான சாலை வசதி, மின்சார வசதி, கழிவறை வசதி, மழை நீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றி உள்ளார் என்பதை அச்சடித்து, வீடு வீடாக சென்று பொது மக்களிடம் வினியோகித்தார்.
கரூர் மாநகராட்சி 48 வார்டுகளைக் கொண்டது. 48 வார்டுகளுக்கும் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் 36வது வார்டு பகுதியில் திமுக சார்பில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட வசுமதி பிரபு வெற்றி பெற்றார்.
கரூர் மாநகராட்சி கவுன்சிலராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, தனது பகுதியில் வாக்காளர்களான பொதுமக்கள் வைத்த கோரிக்கைகளான சாலை வசதி, மின்சார வசதி, கழிவறை வசதி, மழை நீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் என்னவெல்லாம் நிறைவேற்றி உள்ளார் என்பதை அச்சடித்து, துண்டு பிரசுரமாக வீடு வீடாக சென்று பொது மக்களிடம் வினியோகித்தார்.
தனது ஆதரவாளர்களுடன் பகுதி மக்களிடம் நேரில் சென்று துண்டு பிரசுரத்தை விநியோகித்த கவுன்சிலர் வசுமதி பிரபு தனக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து, மேற்கொண்டு பொதுமக்கள் சார்பில் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி கொடுத்தார். கரூர் மாநகராட்சி பெண் கவுன்சிலரின் இந்த வித்தியாசமான முயற்சி அப்பகுதி மக்களிடம் பாராட்டை பெற்றுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்