கரூரில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
கரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சி.ஐ.டி.யு கரூர் கிளை சார்பில், மாவட்ட துணை செயலாளர் கென்னடி தலைமையில், மின்வாரியம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில், 1948 ஆம் ஆண்டு தொழிற்சாலை சட்ட திருத்த மசோதா, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டதை கண்டித்தும், மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் கிளை தலைவர் தனபால் உட்பட பலர் பங்கேற்றனர்.
நில அளவை அலுவலர்கள் தமிழ்நாட்டின் நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கரூர் மாவட்ட கிளை சார்பில்,மாவட்ட தலைவர் மகேந்திரன் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. நில அளவை கள அலுவலர்களின் பணி சுமையை கருத்தில், கொள்ளாமல் நில அளவர் முதலுதவி இயக்குனர் வரையிலான அலுவலர்கள் மீது, நடவடிக்கை எடுத்து வரும் நிலவரைத் திட்ட இயக்குனரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து, கோஷமிட்டனர். கரூர் கோட்டை தலைவர் தங்கவேல், மாவட்ட செயலாளர் பாஸ்கர், மாவட்ட பொருளாளர் தமிழரசன் உள்பட பலர், கருப்பு பேஜ் அணிந்து பங்கேற்றனர்.
சி.பி.எஸ் ஒலிப்பு இயக்கம்
கரூர் மாவட்ட சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அரசகுமார்,ராமசாமி ஆகியோர் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில்,தி.மு.க.வின் தேர்தல் கால வாக்குறுதி எண், 39 இன் படி, புதிய ஓய்வூதிய திட்டத்தை சிபிஎஸ் ரத்து செய்ய வேண்டும், பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட,பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாநில துணைத்தலைவர் மகாவிஷ்ணு,மாவட்ட செயலாளர் தாமோதரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
சத்துணவு ஊழியர் சங்கம் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில்,கலெக்டர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்பு ஓய்வூதியம் 900 ரூபாய் வழங்க வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு திட்டத்துடன் இணக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் இளங்கோவன் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் சக்திவேல், பொருளாளர் பொன் ஜெயராம் உள்பட பலர் பங்கேற்றனர்.
தபால் அலுவலகம் முன்பு பாமக போராட்டம்
வரும் 2023 24 ஆம் கல்வி ஆண்டில் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் கோரிக்கையான 10.5% இட ஒதுக்கீடு கிடைக்க தமிழக அரசு மே 31ஆம் தேதிக்குள் சட்டம் இயற்றி, வன்னியர் சமூகத்திற்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு கரூர் மேற்கு மாவட்ட பாமக மற்றும் வன்னியர் சங்கம் கரூர் மாவட்ட நிர்வாகிகள் 500 கோரிக்கை மனுக்களை அனுப்பினர். முன்னாள் எம்எல்ஏ மலையப்பசாமி,கரூர் நகர செயலாளர் முருகேசன்,வன்னியர் சங்க கரூர் மாவட்ட செயலாளர் பசுபதி,மாவட்ட அமைப்பு செயலாளர் குணசீலன்,அமைப்பு தலைவர் குணா,பொருளாளர் வரதராஜன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் முத்து, இளைஞரணி மாவட்ட தலைவர் குமரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.