அரவக்குறிச்சி இரண்டு சோதனை சாவடியில் ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட  ரூபாய் 8,33,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


 


 




நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆண்டிப்பட்டி கோட்டை சோதனை சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார்.


 


 




 


அப்போது சிவன் வயது 34 என்பவர் தர்மபுரியில் இருந்து பட்டாசு ஏற்றிக்கொண்டு சிவகாசியில் விற்பனை செய்துவிட்டு  கரூர் ஆண்டிபட்டி சோதனை சாவடி அருகே வரும் பொழுது காவலர்கள் சோதனை செய்த போது ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 5, 31,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு அரவக்குறிச்சி ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் பணத்தை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஒப்படைத்தனர்.


 




 


மேலும், வைரமடை சோதனை சாவடியில் உரிய ஆவணம் இன்றி இது வரை 3,02,000 எடுத்துவரப்பட்ட ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் இதுவரை பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் வாகன சோதனையின் போது ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ரூபாய் 8,33,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.