கரூரில் சிமெண்ட் தொழிற்சாலைக்கு மூலப்பொருள் ஏற்றி வரும் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் மது போதையில் மினி பஸ் மீது மோதி விபத்து - ஓட்டுனரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்த போலீசார்.


 




தூத்துக்குடியில் இருந்து திண்டுக்கல் மாவட்டம், பாளையம் அருகில் அ]மைந்துள்ள கரிக்காலி கிராமத்தில் அமைந்துள்ள செட்டிநாடு சிமெண்ட் தொழிற்சாலைக்கு மூலப் பொருள் கொண்டு செல்லும் லாரியை பாஸ்கர் என்ற ஓட்டுநர் இயக்கி வந்துள்ளார். 


 




 


மது போதையில் லாரியை ஓட்டி வந்த அவர், கரூர் நகரப் பகுதிக்குள் திருமாநிலையூர் அமராவதி மேம்பாலத்தை கடந்து வரும்போது, லைட் ஹவுஸ் பேருந்து நிறுத்தம் அருகில் பயணிகளை இறக்கி விட்டுக் கொண்டிருந்த மினி பேருந்தை கடந்து செல்ல முற்படும்போது, பேருந்தின் பின்பகுதியில் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. 


அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத நிலையில்,  பொதுமக்கள் மது போதையில் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை மடக்கிப் பிடித்துள்ளனர். 


 




கரூர் காவல் நிலையத்திற்கு அளிக்கப்பட்ட தகவலின் பெயரில், அப்பகுதிக்கு வந்த போலீசார் லாரி ஓட்டுநர் பாஸ்கரை கைது செய்து, சிமெண்ட் தொழிற்சாலைக்கு மூலப்பொருள் கொண்டு செல்லும் லாரியையும் பறிமுதல் செய்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண