கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.





அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 35 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் எம்ஜிஆர்  திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.




அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட அதிமுக கழகவைத் தலைவர் திரு.வி.கா உள்ளிட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், நகர கழக, ஒன்றிய கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


 






தாறுமாறாக செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்


கரூர் கோவை, ஈரோடு பிரிவு சாலையில் நிலவிவரும் போக்குவரத்து நெருக்கடிக்கு தேவையான சீரமைப்பு ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.  கரூர் திருக்காம்புலியூர் ரவுண்டானாவையும் தாண்டியது முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோயில் பகுதியில் ஒட்டி கோவை மற்றும் ஈரோடு போன்ற பகுதிகளுக்கான சாலை செல்கிறது. 


கரூரில் இருந்து கோவை, ஈரோடு, பழனி, பொள்ளாச்சி, திருப்பூர் போன்ற பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் இந்த பிரிவின் வழியாக பல்வேறு பகுதிகளுக்குச் செல்கிறது. இதே போல், இந்த பகுதிகளில் இருந்து கரூர் வரும் அனைத்து வாகனங்களும் பிரிவு சாலையின் வழியாக இணைந்து கரூர் நோக்கிச் செல்கிறது. இந்த சந்திப்பு பகுதியில் சிக்னல் அமைக்காத காரணத்தினால் கரூர் நோக்கி ஒரு வாகனங்களும், கோவை, ஈரோடு செல்லும் வாகனங்களும் தாறுமாறாக கடந்து செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது இதனை கட்டுப்படுத்த


 இந்த சந்திப்பு பகுதியில் தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பார்வையிட்டு கரு கோவை, ஈரோடு சந்திப்பு பகுதியில் நிலை வரும் போக்குவரத்து பிரச்சனைக்கு தீர்வு காண தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


வக்கீல் சங்க அவசர செயற்குழு கூட்டம்.


கரூர் மாவட்டம் குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வக்கீல் சங்க அவசர செயற்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வக்கீல் சங்க தலைவர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். செயலாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார். 


வக்கீல் சங்க உறுப்பினர்கள் குமார், வாசுதேவன் ஆகிய இரண்டு பேரும் கடந்த 16ஆம் தேதி மீண்டும் மருதூர் பொதுமக்கள் மத்தியில் பொது இடத்தில் சட்ட நடவடிக்கைகளை பின்பற்றாமல் மரியாதை தர குறைவான வார்த்தைகளால் உரிமையில் பேசிய குளித்தலை ஆர்டிஓ புஷ்பா தேவி வழக்கறிஞர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் வக்கீல்களை தொடர்ந்து அவமதிப்பு செய்வதையும் கண்டித்து குளித்தலை நீதிமன்றங்கள் மற்றும் கிருஷ்ணராயபுரம் நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களில் நீதிமன்ற பணிகளில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை ஒரு நாள் நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி இருப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் குளித்தலை நீதிமன்ற பணிகள் வக்கீல்கள் வராததால் பணிகள் பாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் வக்கீல் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.