மாயனூர் கதவணைக்கு 9,541 கன அடி நீர்வரத்து.
மாயனூர் கதவணைக்கு, 9,541 கனஅடி தண்ணீர் வந்தது. கரூர் அருகே, மாயனூர் கதவணைக்கு காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 9,541 கனஅடியாக தண்ணீர் வந்தது. டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடிக்காக காவிரியாற்றில், 9,141 கன அடியும், தென்கரை வாய்க்காலில், 400 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது. கீழ் கட்டளை வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் காலை 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 175 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில், தற்காலிகமாக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அமராவதி அணைக்கு வினாடிக்கு காலை, 429 கன அடி தண்ணீர் வந்தது. 90 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் 47.77 அடியாக இருந்தது.
கரூர் மாவட்டம், க. பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை.
26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 10.16 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்