மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு, 51 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு, ஒரு லட்சத்து, 51 ஆயிரத்து, 509 கன அடி தண்ணீர் வந்தது. காலை 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 60 ஆயிரத்து, 357 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. டெல்டா பாசன பகுதிக்கு குருவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில், 59 ஆயிரத்து, 137 கன அடி தண்ணீரும், நான்கு வாய்க்காலில், 1,220 தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 1,892 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 1,883 கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டது. ஆனால், ஆற்றுப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக, கரூர் அருகே பெரியாண்டாங் கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 3,566 கன அடி தண்ணீர் வந்தது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஷட்டர்கள் மூலம், 9 கன அடி தண்ணீர் வெளியேறியது. 90 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம், 87.50 அடியாக இருந்தது.
திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், காலை நிலவரப்படி அனைத்து தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம் 33.40 கன அடியாக இருந்தது.
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 26.46 அடியாக இருந்தது. அணைப்பகுதியில், 16.2 மி.மீ., மழை பெய்தது.
கரூர் மாவட்டத்தில், காலை 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மி.மீ.,) அரவக்குறிச்சி, 12, அணைப்பாளையம், 3, க.பரமத்தி 7, குளித்தலை 3, தோகை மலை 4.2, பஞ்சப்பட்டி 1.6, கடவூர் 4, பாலவிடுதி 13.4, மைலம்பட்டி 9 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 4.77 மி.மீ., மழை பதிவானது.