கரூர் பசுபதீஸ்வரர் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு உடனடியாக அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் 2019-ல் ஹை கோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில், பல நூற்றாண்டு தொன்மையானது, கரூரின் மையப்பகுதியில் இந்த கோயில் உள்ளது. கோயிலுக்கு சொந்தமான 200 கோடி ரூபாய் மதிப்புள்ள, 10 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, வணிக வளாகங்கள் குடியிருப்பு வீடுகள் அதில் கட்டப்பட்டுள்ளன. இந்த இடத்தை மீட்டு, கோயில் வருமானத்தை அதிகரித்தால்தான் கோயிலுக்கு கா ல பூஜை மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்ய முடியும். எனவே கோயில் நிலத்தை மீட்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை ஏற்கனவே விசாரிக்க ஐகோர்ட் கிளை, கோயில் நிலத்தில், ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வணிக நிறுவனங்களை சீட்டு மூட வேண்டும். ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள குடியிருப்பு உரிமையாளர்கள், தாங்கள் குடியிருக்கும் இடம் கோயிலுக்கு சொந்தமானது என்று கோயில் நிர்வாகத்திடம் உறுதிமொழி பத்திரம் கொடுக்க வேண்டும், என்று உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில்பலர் மனு தாக்கல் செய்திருந்தனர். ஹை கோர்ட் கிளையை நாடி தீர்வு பெறலாம் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் கொண்ட பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு.
கல்யாண பசுபதிசுவரர் கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்க வேண்டும். நோட்டீஸ் வழங்கி அவர்கள் ஆவணம் தாக்கல் செய்ய, போதிய கால அவகாசம் வழங்க வேண்டும். இதில் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் 12 வாரத்தில் முடிக்க வேண்டும். கோயில், நில ஆக்கிரமிப்புகள் தொடர்பாக 2018 முதல் பல உத்தரவுகளை கோர்ட் பிறப்பித்துள்ளது. ஆனால், இந்த உத்தரவுகளை மீறி, சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகள் செயல்பட்டிருந்தால் அவர்கள் மீது துரைரீதியான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.