கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணராயபுரம் அருகே நிகழ்ந்த கோர சாலை விபத்தில், இரு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஆறு பேர் படுகாயமடைந்தனர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continues below advertisement

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள கம்ம நல்லூர் பகுதியில், பள்ளியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் மாணவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அதே சாலையில் எதிர் திசையில் வந்த சொகுசு கார், இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த பிரதாப் மற்றும் மாதேஷ் குமார் ஆகிய இரண்டு பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஸ்ரீதர், விகாஸ் என இரண்டு பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர். மேலும் சொகுசு காரில் பயணம் செய்த நான்கு பேர் என மொத்தம் ஆறு பேர் படுகாயமடைந்தனர்.

Continues below advertisement

விபத்தைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள், காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, இருசக்கர வாகனத்தின் மீது மோதிய சொகுசு கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் இருசக்கர வாகனம் முற்றிலும் நொறுங்கியது. இந்த கோர விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்து தொடர்பாக லாலாபேட்டை போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.