கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இயங்கி வந்ததை விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய வங்கி கிளை அலுவலகத்தினை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் திறந்து வைத்து ரூ.11,66,000 மதிப்பிலான வங்கி கடனுதவிகளை வழங்கினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில், 2001 ஆம் ஆண்டு சிறிய வங்கி கிளையாக ஆரம்பிக்கப்பட்டு 2 பணியாளர்களுடன் இயங்கி வந்த நிலையில் தற்போது 130 கோடி அளவிலான வங்கி வர்த்தகம் நடைபெற்று வருகிறது. பொதுமக்களுக்கு கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் மட்டும் ரூ.30 கோடி மதிப்பீட்டிலான விவசாய கடன், கல்வி கடன், தொழில் கடன், வாகன கடன், வீடு கட்டுவதற்கான கடன், மகளிர் சுய உதவி குழுக்கள் கடன் உதவி, மற்றும் இதர துறையின் மூலம் பல்வேறு கடன் உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது என மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்தார்.
மேலும் 5 பயனாளிகளுக்கு ரூ.11,66,000 மதிப்பிலான கல்வி கடனுதவியும், தொழில் கடனுதவியையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் எம்லியாகத், திட்ட இயக்குநர் சீனிவாசன், மண்டல மேலாளர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஜார்ஜ் பாபு லாசர், முன்னோடி வங்கி மேலாளர் வசந்த்குமார், தனித்துணை ஆட்சியர் (சபாதி) சைபுதீன், வங்கி மேலாளர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (28.03.2023)தமிழ் வளர்ச்சி 2021 - 2022 ஆம் ஆண்டிற்கான கரூர் மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கான உதவித்தொகைக்காக ஆணையினை இரா.சி.பெரியசாமி மற்றும் பழ.பழநியப்பன் ஆகிய இருவருக்கும் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் வழங்கினார்.
கரூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடத்தப்பெற்ற ஆட்சிமொழிச் சட்ட வார விழாவில் தமிழில் வரைவுகள், குறிப்புகள், சுற்றோட்டக் கோப்புகள் என்ற தலைப்பில் அரசுப் பணியாளர்களுக்கு சிறப்பாக பயிற்சியளித்த கரூர் மாவட்ட தனித்துணை (வரவேற்பு) வட்டாட்சியர் திரு.பெ.மோகன்ராஜ் அவர்களுக்கு சான்றிதழ்களும், சிறந்த வரைவுகள் குறிப்புகள் எழுதியமைக்காக கரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரியும் திரு.க.சுப்ரமணி அவர்கள் முதல்பரிசு பெற்றமைக்கான தொகை ரூ.3,000/- (ரூபாய் மூன்றாயிரம் மட்டும்) மாவட்ட நில அளவை அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரியும் திருமதி.ந.பூங்கொடி, மூன்றாம் பரிசு பெற்றமைக்கான தொகை ரூ.1000/- (ரூபாய் ஓராயிரம் மட்டும்), தாந்தோணி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரியும் திரு.ப.சக்கரவர்த்தி அவர்கள் முதல்பரிசு பெற்றமைக்கான தொகை ரூ.3,000/- (ரூபாய் மூன்றாயிரம் மட்டும்) க்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு எம் லியாகத் தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு சைபுதீன், உதவி இயக்குநர் தமிழ் வளர்ச்சி திருமதி,ஜோதி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.