தமிழகத்தில் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் இருசக்கர பழுது நீக்கும் நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்து நிலையங்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் , மூன்று சக்கர வாகனங்கள்,  நான்கு சக்கர வாகனங்கள்,  டீக்கடை முதல் பெரிய, பெரிய உணவகம் வரை, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்காக தேவைப்படும் பலம், வாழை இலை, வாழை மரம், பொரி, சுண்டல், ஆப்பிள், சாத்துக்குடி ,ஆரஞ்சு, திராட்சை, மற்றும் சந்தனம் ,விபூதி ,சூடம், சாம்பிராணி ,பூ ,மாலை ,மற்றும் அழகு சாதன அலங்கார பொருட்களை நேற்று காலை முதலே மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று பொருட்களை வாங்கி வந்தனர். 


 





இந்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள் நாளை விடுமுறை என்பதால் பல்வேறு அலுவலகங்கள் இன்று விடுமுறை அளிக்கப்பட்டு ஆயுத பூஜை விழா ஆங்காங்கே மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கரூர் மாவட்டம், புலியூர், வையம்பட்டி மாநில தேசிய நெடுஞ்சாலை உப்பிடமங்கலம் அருகே நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக ஊழியர்கள் வித்தியாசமாக மைல் கல்லுக்கு (எல்லை கல்) , வண்ணம் பூசி , வாழைமரம் கட்டி , மாலைகள் அணிவித்து, சந்தனப் பொட்டிட்டு, பொரிகடலை, வாழைப்பழம், தேங்காய், வெற்றிலைப் பாக்கு, சூடம் , பக்தி, சாம்பிராணி உள்ளிட்ட பொருட்களை வாழையிலையில் படையலிட்டு, ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி உள்ளிட்ட பழ வகைகளையும் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தினர். 


 


 





தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மற்றும் சிறு குறு தொழிலாளர்கள் தங்களது தொழில் புரியும் இடத்தில் வண்ணம் பூசி ஆண்டுக்கு ஒரு முறை மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் ஆயுத பூஜையில் நிகழ்வுகளை பல்வேறு தொழில் நிறுவனங்கள் பிரமாண்டமாகவும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் எளிமையாகவும் கொண்டாடி பார்த்திருக்கிறோம்.  


 


 





இந்நிலையில் கரூர், உப்பிடமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலை சாலை பணியாளர்கள் மைல் கல்லுக்கு (எல்லை கல்) ஆயுதபூஜை கொண்டாடிய நிகழ்வு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இப்படி புது விதமான ஆயுத பூஜையை எங்கள் ஊர் மக்கள் மட்டுமே வித்தியாசமான முறையில் கொண்டாடுவார்கள் என கரூரில் ஒருதரப்பினர் பேசி வருகின்றனர். எப்படியும் ஆயுதபூஜை கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் பயபக்தியுடன் மைல் கல்லுக்கு (எல்லை கல்) ஆயுதபூஜை கொண்டாடி அசத்திய நெடுஞ்சாலை பணியாளர்களின் வித்தியாசமான முறையில் ஆயுத பூஜை கொண்டாடினர்.


 





 


கரூர் மாவட்டத்தில் மேலும் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதன் பணியாளர்கள் அதிகாரிகள் உள்ளிட்டோர் இணைந்து ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக ஆயுத பூஜை விஜயதசமி பூஜை கொண்டாட்டம் தடை செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு பல்வேறு அரசு அலுவலகங்களில் விமர்சையாக ஆயுத பூஜை, விஜயதசமி பூஜை ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.