கிராம ஊராட்சிகளிலும் சுகாதாரப் பொங்கல் மற்றும் சமத்துவப் பொங்கல்  வெள்ளிக்கிழமையன்று  கொண்டாடப்படவுள்ளது.


 




தமிழர்  திருநாளாம்  தை  முதல் நாளில் சமத்துவம் பெருகவும், சுகாதாரம் மேம்படவும் பொங்கல் திருவிழாவினை ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் சுகாதாரப் பொங்கல் மற்றும் சமத்துவப் பொங்கல் 13.01.2023 வெள்ளிக்கிழமையன்று  கொண்டாடப்படவுள்ளது.  இவ்விழாவில் கலை மற்றும் விளையாட்டு  நிகழ்ச்சிகள்  நடத்திடவும், இந்நிகழ்வில்  ஊராட்சியின் தலைவர், வார்டு உறுப்பினர்கள், அனைத்து  உள்ளாட்சி  பிரதிநிதிகள், பொதுமக்கள், இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் சுய உதவிக்குழு  உறுப்பினர்கள் பங்கேற்று சிறப்பித்திடவும் கேட்டுக் கொள்கிறேன். 


 


ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும்  அனைவரும்  பொது  இடத்தில் ஒன்று கூடி தங்களுக்குள் சமத்துவ  உறுதிமொழியினை எடுத்துக்  கொள்ள  வேண்டும். போட்டிகள் யாவும் கண்டிப்பாக மகளிர் ஈடுபாடு  உள்ளதாக  இருக்க  வேண்டும். தந்தை  பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர்  டாக்டர் கலைஞர் ஆகியோர்களின் சமூகக் கருத்துருக்களை ஒருவருக்கொருவர்  பகிர்ந்து கொள்ளச் செய்ய வேண்டும்.  




 


மக்கள் அனைவரும் சமூக வேற்றுமைகளை  மறந்து  ஒருவருக்கொருவர்  அன்பையும், சமூக நல்லிணக்கத்தினையும் பரிமாறிக் கொள்ள வேண்டும்.  மேலும், அனைத்து சமத்துவபுரங்களிலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.




15.01.2023   பொங்கல்  பண்டிகையை   முன்னிட்டு  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்


 (கும்பகோணம் ) லிட்.,  கும்பகோணம்,  பொதுமக்கள் எளிதாக  எவ்வித சிரமம் இன்றி,  இடையூறும் இன்றி , பயணம் செய்ய ஏதுவாக சென்னையிலிருந்து  கும்பகோணம்,  தஞ்சாவூர்,  பட்டுக்கோட்டை பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால் வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர்,  திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய  இடங்களுக்கும் 12.01.2023, 13.01.2023 & 14.01.2023 ஆகிய நாட்களிலும்  மேலும்  திருச்சியிலிருந்து  தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும்  மதுரை,  கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய  ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கு  12.01.2023 முதல்   14.01.2023 வரையும் ,  அனைத்து  முக்கிய நகரங்களிலிருந்து  அனைத்து நகர் பேருந்துகளும்  பயணிகள்  பயன்பாட்டுற்கு ஏற்ப  இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கின்றோம்.


மேலும் 12.01.2023 முதல்   14.01.2023 வரை  சென்னையிலிருந்து மற்ற ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள்  எளிதாக  பயணம்  செய்யும்  வகையில்,  தற்காலிக  பேருந்து நிலையங்கள்  அமைக்கப்பட்டுள்ளது.


கும்பகோணம்,  தஞ்சாவூர்,  பட்டுக்கோட்டை,  பேராவூரணி மன்னார்குடி,    நன்னிலம்,  திருவையாறு, ஒரத்தநாடு தட பேருந்துகள் , தாம்பரம் சானிடோரியம்  (MEPZ)  அறிஞர்  அண்ணா  பேருந்து  நிலையத்திலிருந்தும்.


கரூர்,  திருச்சி,  அரியலூர்,  செந்துறை,  ஜெயங்கொண்டம்,  புதுக்கோட்டை அறந்தாங்கி,  ராமநாதபுரம்,  ராமேஸ்வரம்,  பரமக்குடி,  மதுரை,  கமுதி,  முதுகுளத்தூர்,  நாகப்பட்டிணம்,  வேளாங்கண்ணி,   மயிலாடுதுறை,  சீர்காழி ,  திருவாரூர் ,   திருத்துறைப்பூண்டி ,   வேதாரண்யம்  தட பேருந்துகள்  கோயம்பேடு   புரட்சித்    தலைவர்  டாக்டர் எம்ஜிஆர்  பேருந்து  நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது  என்பதை மகிழ்வுடன்  தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 16.01.2023, 17.01.2023 & 18.01.2023 ஆகிய   நாட்களில்  சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது  என கும்பகோண மண்டல மோலாண்மை இயக்குநர்  தெரிவிக்கிறார்.