குளித்தலையில் ரயில்வே கேட் தடுப்பு கம்பி மீது சரக்கு வாகனம் மோதியதில் ஏற்பட்ட பழுதானதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம், குளித்தலை, மணப்பாறை சாலையில் குறுக்கே ரயில்வே கேட் அமைந்துள்ளது.
இந்த ரயில்வே கேட்டில் நேற்று கனரக சரக்கு வாகனம் ரயில்வே கேட் தடுப்பு கம்பியின் மீது மோதியதில் தடுப்பு கம்பி சேதம் அடைந்தது. இதனால் ரயில்வே கேட் சரிவர பூட்டப்படாமல் இருந்ததால் ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் அங்கு வந்து தடுப்பு கம்பியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் ரயில்வே கேட் மூடப்பட்டதால் இருபுறமும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், பேருந்துகளில் பயணம் செய்தவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்வதற்காக பேருந்தில் இருந்து இறங்கி நடந்தே சென்றனர். சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னர் பழுது சரி செய்யப்பட்டது. பழுதினை சரி செய்யும் வரை குளித்தலை மணப்பாறை சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
குளித்தலை - மணப்பாறை நெடுஞ்சாலை இடையே உள்ள ரயில்வே கேட் அடிக்கடி கனரக சரக்கு வாகனங்கள் மோதுவதாலும், அடிக்கடி பழுதானதால் குளித்தலை மணப்பாறை நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. அவ்வழியே செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், அரசு, தனியார் ஊழியர்கள், கூலி தொழிலாளிகள் மற்றும் விபத்தினால் காயம்பட்டவர்களை சிகிச்சைக்கு கொண்டு செல்லும் 108 ஆம்புலன்ஸ் உட்பட அனைவரும் பெரிதும் பாதிப்படைந்தனர்.