கரூர் மாவட்டத்தில் நெரூர் மற்றும் அச்சமாபுரம் என இரண்டு இடங்களில் காவிரி ஆற்றில் மணல் எடுக்க பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அனைத்து கட்சியினரும் அவர்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.


 






கரூர் மாவட்டம் நெரூர் வடக்கு கிராமத்தில் 16.05 ஹெக்டேர் பரப்பளவில் மணல் குவாரி, மண்மங்கலம் அச்சமாபுரத்தில் 24.00 ஹெக்டேர் பரபப்பளவில் மணல் குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம் இணைந்து டிஆர்ஓ கண்ணன் தலைமையில்  பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் வாங்கல் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சுமார்  200 பேர்கள் மட்டுமே அமரக்கூடிய இடத்தில், 500க்கும் மேற்பட்ட மக்கள் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சமூக ஆர்வலர்கள் குவிந்ததால் இடப்பற்றாக் குறை ஏற்பட்டது. இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நாம் தமிழர் கட்சி, சமுக ஆர்வலர்கள், சாமானிய மக்கள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி,  மாட்டு வண்டி தொழிலாளர்கள்  உட்பட  1000 க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொள்ள வந்ததால் நிற்க கூட இடம் இல்லாத நிலை ஏற்பட்டது. புதிய மணல் குவாரிகளில் லாரிகளில் மணல் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள்,  மாட்டு வண்டியில் உள்ளுர் தேவைகளுக்கு மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து பேசினர். மாட்டு வண்டியில் மணல் எடுக்கிறோம் என கூறி விட்டு லாரிகளில் மணல் கொள்ளையடிப்பதற்கு  பல்வேறு கட்சி நிர்வாகிகள்,  சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினும் கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.


 




 


45  ஆறுகள், ஆண்டு முழுக்க தண்ணீரோடு ஓடும் கேரளாவில் கடந்த 38 ஆண்டுகளாக  மணல் குவாரிகள் எதுவும் இல்லை. ஒரு கைப்பிடி மணலை கூட ஆறுகளில் அள்ள விடாமல் அரசு இயற்கை வளத்தைப் கண் போல் பாதுகாத்து வருகிறது. ஆனால் 33 ஆறுகள் மட்டுமே உள்ள தமிழகத்தில், அறிவியல் முறைப்படி - இயற்கை மீண்டும் தன்னை  தகவமைத்துக் கொள்ளும் வகையில் ஆற்றில் மணலை அள்ளாமல் எந்த விதியும் பின்பற்றாமல் சட்டவிரோதமாக மணல் அள்ளப் பட்டதால், 160 ஆண்டுகள் அள்ள வேண்டிய மணலின் அளவு, கடந்த 30 ஆண்டுகளில் ஆற்றின் அடிமட்டம் வரை அள்ளப்பட்டு விட்டது. ஆறுகள், ஆறு என்று சொல்லக்கூடிய அளவில் இல்லாமல் தனது இயல்பு நிலையை இழந்து விட்டது.  காவிரி ஆறு கருர் மாவட்டத்தில் உள்ள 140 கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.  தென்மாவட்டங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு இங்கு இருந்து தான் குடி நீர் எடுத்துச் செல்லப்படுகிறது.  இப்பகுதியில் மணல் எடுத்தால் 6 மாதத்தில்  குடிக்க தண்ணீர் இருக்காது. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். தொழில்கள் அழிந்து விடும். காவிரி கரையேர பகுதியில் உள்ள மக்கள் கூட குடி நீருக்காக குடம் தூக்கிக் கொண்டு அலைய நேரிடும்.


 




 


காவிரி இருக்கும் வரைதான் தமிழ்நாடு இருக்கும், தமிழக மக்கள் இருக்க முடியும். காவிரி அழிந்து விட்டால் தமிழகம் அழிந்து விடும். மக்கள் வழ முடியாத நிலை உருவாகி விடும். எனவே தமிழக அரசு கனிம கொள்ளைக்கு வழி வகுத்து மக்களிடம் அவப் பெயரை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். மாட்டு வண்டியில் மணல் எடுப்பதாக கூறி விட்டு ஆயிரக்கணக்கான லாரிகளில் மணல் கொள்ளை அடிக்கின்றனர். கரூரில் 2 இடங்களில் எடுக்கப்பட்ட மணல்  கொள்ளை  220 என்ற பெரிய ஹிட்டாட்சி எந்திரம் மூலம் 16 இயந்தரம் மூலம் மணல் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. தினசரி 2000 வாகனம் மூலம் மணல் கொள்ளை எடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற கருத்து கேட்டு கூட்டம் கண்துடைப்புக்காக நடத்தப்படுகிறது. காவிரி என்பது கேள்விகுறியாக உள்ளது. சட்ட விரோத மணல் கொள்ளையால் காவிரி ஆறு வனமாக மாறிவிட்டது. புதிய இடங்களில் மணல் எடுக்க அனுமதி அளித்தால், காவிரி இடையே புதிதாக கட்டப்படும் தடுப்பணை . ஏற்கனவே இருந்து வரும் ரயில்வே பாலம் ஆகியவை பாதிக்கப்படும். மணல் எடுக்க இயந்திரங்களை அனுமதிக்க கூடாது. காவிரியில் சட்டவிரோதமாக பொக்கலின் மூலம் மணல் அள்ளப்பட்டு லாரிகளில் எடுத்து செல்லப்பட்டால் பெரிய போராட்டம் நடத்தப்படும் என அனைத்து தரப்பு மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.