சர்வதேச முருங்கை கண்காட்சி துவக்கம்.


கரூரில் முதல்முறையாக இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் மூன்று நாட்கள் நடைபெறும் சர்வதேச முருங்கை கண்காட்சியை அமைச்சர் செந்தில் பாலாஜி, பன்னீர்செல்வம், அன்பரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தமிழகத்தில் அதிக அளவு முருங்கை சாகுபடி செய்யும் பகுதியாக கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், தென்னிலை, வைரமடை, கோடந்தூர் ஆகிய பகுதிகளில் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பிற்கும் அதிகமாக, முருங்கை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. முருங்கை சாகுபடி தொழிலை மேன்மைப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடம் எடுத்துக் கூறி, முதல் முறையாக சர்வதேச முருங்கை கண்காட்சி தொடக்க விழா கரூர் பிரேம் மஹாலில் நடைபெற்றது. முருங்கை கண்காட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், சிறு, குறு, தொழில்துறை அமைச்சர் அன்பரசன், மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு, குத்து விளக்கு ஏற்றி கண்காட்சியை துவங்கி வைத்தனர். தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டனர். கண்காட்சி துவங்கி மூன்று நாட்கள் ஐந்து மற்றும் ஆறு தேதி வரை நடைபெறும். இந்த கண்காட்சியில் விவசாய பெருமக்கள், தொழில் முனைவோர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பார்வையிட்டு செல்கின்றனர்.


 




 


 


கண்காட்சியில் முருங்கை வகைகள்.


கண்காட்சியில் முருங்கை சார்ந்த விவசாய பொருட்கள், மதிப்பு கூட்டப்பட்ட முருங்கை பொடி வகைகள், முருங்கை பொடி, முருங்கை பிசின் பொடி, முருங்கை எசன்ஸ், தின்பண்டங்கள், முருங்கை முறுக்கு, முருங்கை முட்டாய், முருங்கை வடை, முருங்கை தட்டுவடை, முருங்கை ஐஸ்கிரீம், முருங்கை பீடா, முருங்கை மருந்து, முருங்கை மாத்திரை, முருங்கை கிரீம், முருங்கை டீ, முருங்கை நூடுல்ஸ், முருங்கை சிப்ஸ், முருங்கை தேன், முருங்கை இலை இட்லி பொடி, முருங்கை உருண்டை, முருங்கை விதை, முருங்கை உரம், முருங்கை மாவு, முருங்கை இலை, செடிகள், விவசாயிகள் பயன்படுத்துவதற்கு தேவையான அனைத்து வகையான பொருட்கள் அந்த கண்காட்சியில் இடம் பெற்றன. முருங்கையில் இத்தனை வகைகளா என்று மக்கள் ஆச்சரியத்துடன் கண்டுகளித்தனர். முருங்கைக்கீரை ஐஸ்கிரீம், சில்லி ஐஸ்கிரீம், பப்பாயா ஐஸ்கிரீம் என ஐஸ்கிரீம் வகையில் பல வகையான ஐஸ்கிரீம் அங்கு கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு வந்த பொதுமக்களும் அதனை ருசித்து வீட்டிற்கு வாங்கி சென்றனர். முருங்கை செக்கு எண்ணெய் வகைகள் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


மேலும், முருங்கை சார்ந்த பொருட்களில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயார் செய்யக்கூடிய நவீன இயந்திரங்கள், வேளாண் இடுபொருள்கள் வேளாண் கருவிகள் இடம்பெற்றுள்ளன. முருங்கை மரம், ஒட்டு முருங்கை மரம் என  பல வகையான மரங்கள், தென்னம் கன்றுகள், நெட்டை மற்றும் குட்டையாக ரக உள்ள வித்துக்கள், இளநீர் காய்ப்பதற்காக பிரத்தியேகமாக வளர்க்கப்படும் தென்னங்கன்று முதல் மூன்று ஐந்து ஆண்டுகளுக்குள் பலன் தரும் வகையிலான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இயந்திரங்களைக் கொண்டு முருங்கை, முருங்கைக்காய், முருங்கை பட்டை ஆகியவற்றை எவ்வாறான முறைகளில் பதப்படுத்தி, அதனை பாக்கெட் செய்வது, முருங்கை விதையை உடைத்து அதில் எவ்வாறு மதிப்பு கூட்டி பொதுமக்களும் விற்பனை செய்வது, என்பதை பற்றிய நேரடியாக தெரிந்து கொள்ளும்படி, அதிகமான அளவில் மிசின்கள், விவசாய கருவிகள், தொழில்நுட்ப உதவிகள் அமைக்கப்பட்டிருந்தன.


 




 


 


இதில் கலெக்டர் பிரபுசங்கர் எம்எல்ஏக்கள் அரவக்குறிச்சி இளங்கோ, குளித்தலை மாணிக்கம், கிருஷ்ணராயபுரம் சிவகாமசுந்தரி, மாவட்ட வருவாய் அதிகாரி  ரவிச்சந்திரன், கோட்டாட்சியர் ரூபினான், கரூர் ஜவுளி ஏற்றுமையால் சங்கம் முன்னாள் தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து, வி.என்.சி குரூப் இயக்குனர் கோகுல், மேயர் கவிதா, கணேசன், துணைமேயர் தாரணி, சரவணன், கரூர் மாநகர செயலாளர் கனகராஜ், செயலாளார் பாண்டியன் தலைமை செயற்குழு உறுப்பினர் காலனி செந்தில், சாலை சுப்பிரமணியன், மாநகராட்சி மண்டல அன்பரசன், வெங்கமேடு சக்திவேல் ராஜா, நகராட்சி தலைவர்கள் குணசேகரன், முனைவர் ஜான், ஒன்றிய செயலாளர்கள் கந்தசாமி ரகுநாதன் வளர்மதி சிதம்பரம் கோயம்பள்ளி பாஸ்கர், நெடும்பூர் கார்த்தி, கரூர் மாநகராட்சி பகுதி செயலாளர் வக்கீல் சுப்பிரமணியன், கரூர் கணேசன், மாமன்ற உறுப்பினர்கள் சாலை ரமேஷ், பசுவை சக்திவேல், மாவட்ட துணை செயலாளர் கருணாநிதி, ரமேஷ்பாபு, உறுப்பினர்கள் தோட்டகுறிச்சி, பேரூராட்சி தலைவர் ரூபா முரளி ராஜா, கோடந்தூர் ராஜா, கிருஷ்ணன், மலையம்மன், அருள்முருகன் அரசு துறை அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


50,000 ஏக்கர் முருங்கை விவசாயம்.


இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியதாவது, அரசு முருங்கை மண்டலமாக கரூர் மாவட்டத்தை அறிவித்துள்ளது. இந்த முருங்கை மண்டலமாக கரூர், திண்டுக்கல், தேனி, திருப்பூர், தூத்துக்குடி, அரியலூர், மதுரை மாவட்டங்களில் அதிக அளவில் முருங்கை உற்பத்தி உள்ளது. எனவே, முருங்கை ஏற்றுமதி மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏற்றுமதி ஆலோசகர் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணி அமைக்க திட்டம் மதிப்பீடு செய்யப்பட உள்ளது. இதை படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும். தமிழ்நாட்டில் மட்டும் முருங்கை சாகுபடி 53 ஆயிரத்து 500 ஏக்கர் அளவிற்கு விவசாயம் உள்ளது. உலகிற்கே மதிப்பு கூட்டப்பட்ட முருங்கை உணவுப் பொருட்களை வழங்கும் இடமாக கரூர் மாவட்டம் அமைவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்றார்.


 




 


அமைச்சர் அன்பரசன் பேசியதாவது, வேளாண்மை துறையில் சிறந்து விளங்கும் தமிழகம், இன்றைக்கு அதற்கு இணையாக தொழில் துறையிலும் முன்னேறி உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த சத்துள்ள உணவான முருங்கையை நாம் வணிகப் பொருளாக பயன்படுத்துவதில்லை. சமீப காலமாக அந்த முருங்கை மரங்கள் வணிகரீதியாக தமிழகத்தின் கரூர், தாந்தோணி, திண்டுக்கல், சிவகங்கை போன்ற பல்வேறு மாவட்டங்களில் பல்லாயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது. அவை சாகுபடி செய்யப்படும் முருங்கை உணவுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் 10 ஏக்கர் நிலத்தில் முருங்கை பார்க் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். புதிய வேளாண் தொழில்துறையை வளர்த்தெடுத்து தமிழகத்தை தொழில்துறையில் முதன்மை மாநிலமாக உருவாக்க வேண்டும் என்றார்.