கரூர் மாவட்டம் குளித்தலை காவிரி ஆற்றில் மீன் பிடிக்க சென்ற மீன்பிடி பெண் தொழிலாளி புதை மணலில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ராதா (73). மீன் பிடி தொழிலாளியான இவர் இன்று காலை குளித்தலை காவிரி ஆற்றில் வழக்கம்போல் மீன் பிடிக்க சென்று உள்ளார். ஆற்றில் மீன் பிடிப்பதற்காக வலையினை நீரினுள் கம்பிகளால் நட்டு வைத்து வந்துள்ளார். அப்போது புதை மணலில் சிக்கியவர் அதிலிருந்து தப்பிப்பதற்காக முயற்சித்தும் பலன் அளிக்காமல் நீரில் மூழ்கினார்.
உடன் மீன் பிடிக்க வந்தவர்கள் அவரை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனை சவக்கடங்கில் வைக்கப்பட்டது. இது குறித்து குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குளித்தலை காவிரி ஆற்று பகுதிகளில் அதிகளவில் மணல் அள்ளியதன் காரணமாக புதை மணல் குழிகள் உள்ளன. இதனால் புதைமணலில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் தங்களது உயிரை இழந்து உள்ளனர். புதை மணலில் சிக்கி மீன் பிடிக்கும் மூதாட்டி உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்