பெண்ணை தரக்குறைவாக பேசி பேருந்தினை விட்டு இறக்கி விட்ட அரசு பேருந்து நடத்துநர் - வைரலாக பரவிய பரபரப்பு வீடியோ;


கரூரிலிருந்து ஆலமரத்துப்பட்டி சென்ற அரசு நகரப்பேருந்து, கோடங்கிபட்டி வந்த போது அங்கு ஒரு தாய், மகள் இருவரும் ரேஷன் கடை பொருட்களை நகரப்பேருந்தில் வைத்த சமயத்தில் திடீரென்று பேருந்தை எடுத்துள்ளனர். அந்த பேருந்தில் சிறுமி ஏறிய நிலையில், தாய் ஏறுவதற்கு முன்னர் பேருந்தை எடுத்ததால் அந்த சிறுமியின் தாய் என் பிள்ளை, என் பிள்ளை என்று கதறியுள்ளார். பின்னர் மக்கள் அந்த பேருந்தை துரத்தி பிடித்து சிறைபிடித்துள்ளனர். 




 


இந்நிலையில், அதே பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகையில், மகளிருக்கு இலவச பேருந்து என்று அரசு உத்தரவிட்டும் மகளிரை மதிப்பதில்லை என்றும், நாயை விட கேவலமாக நடத்துவதாகவும்,  இவ்வழியாக செல்லும் அரசு பேருந்து நடத்துநர்கள் கீழ்தரமாக பேசி வருவதாகவும், பெண்கள் மானமுடன் வாழ பணம் கொடுத்தே பயணிக்கின்றோம் எனவும் இலவசம் என்ற ஒன்று வேண்டாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.




 


கரூர் நகர பேருந்தில் பெண் பயணியை அவமரியாதையாக நடத்திய விவகாரத்தில், ஓட்டுனர் பன்னீர்செல்வம் மற்றும் நடத்துனர் மகேந்திரன் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம்;


கரூர் நகர பேருந்தில் பெண் பயணியை அவமரியாதையாக நடத்திய விவகாரத்தில், ஓட்டுனர் பன்னீர்செல்வம் மற்றும் நடத்துனர் மகேந்திரன் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு வேறு மண்டலத்திற்கு இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.


 




 


இந்த நிலையில், பெண் பயணியை அவமரியாதையாக நடத்திய விவகாரத்தில், கரூர் மண்டல பொது மேலாளர் குணசேகரன் பரிந்துரையின்பேரில், ஓட்டுநர் பன்னீர்செல்வம் காரைக்குடி மண்டலத்திற்கும், நடத்துனர் மகேந்திரன் தேவகோட்டை மண்டலத்திற்கும்  இடமாற்றம் செய்து கும்பகோணம் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் ராஜ்மோகன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், இருவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்தும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண