கிரஷர் நிறுவனங்கள், லாரிகளுக்கு டிரான்சிட் பாஸ் வழங்காததை கண்டித்து, கரூர் மாவட்ட டாரஸ் மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.


 



கரூர் மாவட்ட டாரஸ் மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் இன்று முதல் வேலை நிறுத்தம்


 


தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும், கிரஷர்களில் ஜல்லி, எம்.சாண்ட் மற்றும் பி.சாண்ட் லோடு ஏற்றி செல்லும்போது, கிரஷர் நிறுவனங்கள் டிரான்சிட் பாஸ் வழங்குவதில்லை. இதனால், அதிகாரிகள் சோதனை நடத்தி லாரியை பறிமுதல் செய்வதோடு, லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் மீது வழக்கு பதித்து கைது செய்கின்றனர்.


 


 




இதனால் வாடகைக்கு லோடு ஏற்றி செல்லும் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கிரஷர் நிறுவனத்தினர் டிரான்சிட் பாஸ் வழங்காததை கண்டித்து, அனைத்து மாவட்ட லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு ஆதரவு கொடுக்கும் விதமாக கரூர் மாநகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டி, கரூர் மாவட்ட டாரஸ் மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர்.


 




 


இந்த வேலை நிறுத்தத்தில் சுமார் 500 டாரஸ் மற்றும் டிப்பர் லாரிகள் ஈடுபட்டுள்ளன. இந்த வேலை நிறுத்தம் காரணமாக கரூர் மாவட்டத்தில் கட்டுமான பொருட்களை ஏற்றி செல்லும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.