கரூர் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் - தமிழக அரசின் கைத்தறித்துறை இயக்குனர் ஆய்வு
தமிழக அரசின் கைத்தறி துறை இயக்குனரும் கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான திரு.டி. பி. ராஜேஷ் பல்வேறு துறைகளின் சார்பாக நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

தமிழக அரசின் கைத்தறி துறை இயக்குனரும் கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான திரு.டி. பி. ராஜேஷ் அவர்கள் கரூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பாக நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழக அரசின் கைத்தறித்துறை இயக்குனரும் கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான திரு. டி.பி.ராஜேஷ் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் த. பிரபு சங்கர், அவர்கள் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைந்த ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு துறைகளில் சார்பாக நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் மற்றும் திட்டமிடல் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.
முன்னதாக. கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் எழுதியாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் பணியினை பார்வையிட்டு கண்காணிப்பு அலுவலர் அவர்கள் குழந்தைகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார் . மேலும் செக்கணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகளுக்கு காலை உணவு அளிக்கப்பட்டு சாப்பிடுவதை பார்வையிட்டார்கள். குழந்தைகளின் பெற்றோர்களிடம் காலை உணவு திட்டம் குறித்து அதன் பயன் குறித்து கண்காணிப்பு அலுவலர் அவர்கள் கேட்டறிந்தார். குழந்தைகளின் பெற்றோர்கள் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் எங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது காலையில் நாங்கள் எழுந்து வேலைக்கு செல்லும் அவசரத்தில் குழந்தைகளுக்கு உணவு சமைத்துக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது என தெரிவித்தார்கள்.

அதனைத் தொடர்ந்து குளித்தலை ஊராட்சி ஒன்றியம் மணத்தட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் குழந்தைகளின் வாசிப்பு திறன் குறித்தும், கடம்பர் கோவில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு, அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி உயரம் மற்றும் எடை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டும். இணங்கூர் குளம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டதை பார்வையிட்டும், காகனூர் பகுதியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட த்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட தரிசு நிலங்களில் அமைக்கப்பட்ட மீன் வளர்ப்பு குட்டை, உளுந்து பயிரிடப்பட்டது, ஆழ்துளை கிணறு அமைத்து அதற்கு மின் மோட்டார் மூலம் மின் இணைப்பு கொடுத்து பாசன வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ள பணிகளையும், மேற்கொண்டு தரிசு நிலத்தில் என்னென்ன பயிர்கள் குறுகிய காலம் மற்றும் நீண்ட கால பயிரிட திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறித்தும் விவசாயிகள் மற்றும் விவசாயத் துறை அலுவலர்களுடன் கலந்துரையாடினார்.
அதனைத் தொடர்ந்து கிருஷ்ணராயபுரம் வட்டம் மணவாசி சமத்துவபுரத்தில் சமுதாயக்கூடம், அங்கன்வாடி மையம், மற்றும் வீடுகள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதையும், தான்தோன்றி ஊராட்சி ஒன்றியம் வெள்ளியணையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.13.36 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலையையும், அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.1.57 லட்சம் மதிப்பில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதையும், தாளியாம்பட்டி கிராமத்தில் 15-வது நிதி குழு மானியத்தில் 45 தனிநபர் குடியிருப்புகளுக்கு ரூ.44. 44 லட்சம் மதிப்பில் குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளையும் கண்காணிப்பு அலுவலர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

மேலும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை மேம்படுத்தி விளை நிலங்களாக மாற்றும் பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகளை விரைவாக முடித்து விவசாயிகளுக்கு அலுவலர்கள் அரசின் திட்டங்களை சிறப்பாக கொண்டு சேர்த்து உதவிட வேண்டும் என தமிழக அரசின் கைத்தறித்துறை இயக்குனரும் கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான திரு. டி.பி.ராஜேஷ் அவர்கள், அறிவுறுத்தினார்கள். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வங்கியாளர் கூட்டம் தமிழக அரசின் கைத்தறித்துறை இயக்குனரும் கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ம.லியாகத், மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) திருமதி கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திருமதி வாணிஈஸ்வரி, மகளிர் திட்ட இயக்குனர் திரு.சீனிவாசன், மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு. தண்டாயுதபாணி, வருவாய் கோட்டாட்சியர்கள் திருமதி புஷ்பா தேவி (குளித்தலை), செல்வி .ரூபினா(கரூர்), உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர் .





















