பள்ளிக்கூட மணி அடிச்சாச்சு நிகழ்ச்சியின் மூலம் பள்ளி இடை நின்ற 25 குழந்தைகளை பள்ளியில் சேர்க்க பேருந்தில் மாணவிகளுடன் பயணித்த மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர். கரூர் மாவட்டம், தோகைமலை ஊராட்சி ஒன்றியம், வாளியாம்பட்டி கிராமத்தில் இன்று இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிக்குச் செல்லாமல் இடை நின்ற 32 குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக அவர்களின் அத்தியாவசிய தேவைகளான புத்தகங்கள், சீருடை, புத்தகப்பை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து கொடுக்கப்பட்டு, நீடிக்கப்பட்ட புதிய பேருந்து வழித்தடத்தின் மூலம் குழந்தைகளை பேருந்தில் ஏற்றி அதே பேருந்தில் தானும் பயணித்து, பள்ளி வரை சென்று சந்தனம், குங்குமம், மலர், இனிப்பு வழங்கி மாணவிகளை வரவேற்று வகுப்பறையில் அமர வைத்து ஆசிரியர்கள் பாடம் எடுக்கும் நிகழ்ச்சியிணை ஆர்வமுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர் பார்வையிட்டார்.





இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர்  உத்தரவிற்கிணங்க மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீற்வைத்துறை அமைச்சரின் அறிவுரையின்படி கரூர் மாவட்டம் "பள்ளிக்கூடம் மணியடிச்சாச்சு" என்ற மாபெரும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.




இதில் பள்ளிக்கு செல்லாமல் இடைநீற்றல் குழந்தைகளை கண்டறிந்து, மீண்டும் பள்ளிக்கு  சேர்க்கக்கூடிய இயக்கம் அமைந்திருக்கிறது. தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தில் வளியாம்பட்டி என்ற கிராமத்தில் 25 குழந்தைகள் இடைநின்று, இரண்டு ஆண்டுகள் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் கண்டறியப்பட்டது. தொடர்ச்சியாக அவர்கள் ஊரில் வீடு வீடாக சென்று என்னென்ன தேவை என்று கண்டறிந்து ஏன் பள்ளிக்கு குழந்தைகள் செல்லாமல் இருக்கிறார்கள் என்று ஆய்வு செய்யப்பட்டது. அதற்காக அந்தப் ஊருக்கு பேருந்து வசதி புதிதாக ஏற்பாடு செய்யப்பட்டு 25 குழந்தைகளை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து அதிகாரிகள் பேருந்தில் ஏறி குழந்தைகளை இன்று பள்ளியின் வகுப்பறையில் விடப்பட்டது. தொடர்ந்து இந்த குழந்தைகள் பள்ளிக்கு வருவதற்கு தேவையான ஏற்படுகள் செய்து கொடுக்கப்படும்.


எந்த சூழ்நிலையில் அவர்கள் பள்ளிக்கு வருகிறார்கள் என்று கண்டறிய அவர்களுக்கு தகுந்த அனைத்து உதவிகளும் செய்யப்பட்டுள்ளது. இதன் முயற்சி முதல் வெற்றி பெற்றது. இந்த முயற்சி வெற்றி பெற்றதை போல, கரூர் மாவட்டத்தில் 2000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இடைநிற்றல் காரணமாக பள்ளி படிப்பை தொடராமல் இருப்பவர்கள் உரிய காரணம் கண்டறியப்பட்டு, அந்த காரணம் சரி செய்யப்பட்டு மீண்டும் இடைநீற்றல் கல்வி கற்றல் தொடங்கிட அனைத்து விதமான முயற்சிகள் செய்திட பள்ளிக்கூடம் மணி அடிச்சாச்சு என்ற நிகழ்ச்சியின் மூலம் நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று  தெரிவித்தார். மேலும், வாலியாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 19 பயனாளிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க மூலம் ரூ10,64000 இலட்சம் மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு கடன் உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிரபு சங்கர் வழங்கினார்.




இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் புஷ்பாதேவி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இளம்செல்வி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துறை ஆட்சியர் சைபுதீன், மாவட்ட சமூக நல அலுவலர் நாகலட்சுமி, மாவட்ட வழங்கள் அலுவலர் தட்சிணாமூர்த்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கரூர் மண்டல மேலாளர் குணசேகரன், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் குணசீலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண