கரூரில் வாசலில் வண்ண கோலமிட்ட பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று பரிசுகளை வழங்கிய கரூர் காங்கிரஸ் நிர்வாகி.


 


 




பொங்கல் என்றாலே பல்வேறு விளையாட்டு போட்டிகள் சுவாரசிய நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெண்களுக்கு பிடித்த போட்டியாக கருதப்படும் கோலம் போடும் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டுமென விடாமுயற்சியுடன் தங்களது கோலத்திற்கு பல்வேறு வகையான வண்ணங்களை வரைந்து வெற்றி பெற பெண்கள் மற்றும் சிறுமிகள் ஆர்வத்துடன் போட்டியில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கரூர், வடக்கு காந்திகிராமம், குமார் ஸ்டோர் அருகே உள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகளில் கரூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி லியோ ஸ்போர்ட்ஸ் சதீஷ் வண்ணக் கோலமிட்ட அனைத்து மக்களுக்கும் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.


 




சிறப்பு கோல போட்டியில் 500க்கும் மேற்பட்ட கோலங்கள் கணக்கெடுக்கப்பட்டு அனைவருக்கும் இலவச பரிசு வழங்கிய பின்னர் அதில் வாசலில் சிறப்பாக கோலம் வரைந்த பெண்களை தேர்வு செய்து மூன்று தெருக்களாக பிரிக்கப்பட்டு முதல் மூன்று பரிசுகள் என மொத்தம் ஒன்பது பரிசுகளை வழங்கப்பட்டது. தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் இவ்வகையான போட்டிகளை நடத்தி பெண்களுக்கு உற்சாகமூட்டி வருவதுடன் சிறுவர், சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டி அப்பகுதியில் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக அனைவருக்கும் பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.


 


 




 


அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் அப்பகுதியில் பல்வேறு தரப்பட்ட மக்களிடையே நன்கு பழகக்கூடிய நிலையில் பல்வேறு வகையான நற்பணிகளையும் கட்சி சார்பின்றி இதுவரை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வண்ணக் கோலமிட்ட அனைத்து பொதுமக்களுக்கும் இலவச பரிசு உடன் வசந்த & கோ உரிமையாளர் புகைப்படத்துடன் மாத காலண்டரையும் வழங்கி சிறப்பித்துள்ளார்.