கரூர் மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. அதில் குறிப்பாக விவசாயம் சார்ந்த பகுதியாக கருதப்படுகிறது. அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, இந்த சட்டமன்ற தொகுதியில் தேர்தல் வாக்குறுதியின் போது தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் திமுக வெற்றி பெற்றால் ஓராண்டுக்குள் அரசு கலைக்கல்லூரி அறிவிக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியிலும், தேர்தல் பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் மத்தியிலும் தெரிவித்தார். அதேபோல் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜியிடம் அப்பகுதி மாணவர்களும், பொதுமக்களும் அரசு கலைக்கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் நேரத்தில் வைத்தனர். 


 


 





கரூரில் அரசு கலைக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, வேளாண்மை கல்லூரி என மூன்று கல்லூரிகள் தற்போது உள்ளது. அதேபோல் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தரகம்பட்டி அருகே அரசு கலைக்கல்லூரி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அய்யர் மலை பகுதியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பெயரில் அரசு கலைக்கல்லூரி கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பகுதியில் கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.


 


 




அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்களின் 30 ஆண்டு கால கோரிக்கையை ஏற்று அரவக்குறிச்சியில்  கலை அறிவியல் கல்லூரி திறக்கப்பட்டுள்ளது. சென்னையில் காணொளி காட்சி வாயிலாக தமிழகத்தில் 20 கலை அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டன. அதில், குறிப்பாக கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கலை அறிவியல் கல்லூரி வந்திருப்பதால் அப்பகுதி மாணவர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.


இந்த ஆண்டு முதல் கல்லூரி செயல்பட தொடங்கும் எனவும் இந்த ஆண்டில் அரவக்குறிச்சி அரசு கலைக் கல்லூரியில் பி ஏ தமிழ், பி.ஏ ஆங்கிலம், பிகாம் பிஎஸ்சி, கணிதம் பிஎஸ்சி கணித அறிவியல் என ஐந்து பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பாடப்பிரிவிலும் தலா 50 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.


 




 


இந்த  நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பள்ளப்பட்டி பகுதியில் உள்ள நகராட்சி தலைவர் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர். கடந்த இரண்டு மாதமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ எந்த ஒரு அரசு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மொத்தத்தில் தற்போது கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதியிலும் தலா ஒரு அரசு கலைக்கல்லூரி துவங்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் மகிழ்ச்சி.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண