ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்.

 

கரூர் வட்டம் வெள்ளியனை ஊராட்சி செல்லாண்டிப்பட்டியில் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமையில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி.செ.ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் (குளித்தலை), இளங்கோ (அரவக்குறிச்சி) மற்றும் சிவகாமசுந்தரி (கிருஷ்ராயபுரம்) ஆகியோர் முன்னிலையில்  நடைபெற்றது.

 



 

 

மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது,

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசுத் துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாகவும் , எளிதாகவும் அவர்களைச் சென்று சேரும் வகையில் " "மக்களுடன் முதல்வர்" என்ற திட்டத்தை மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ,நகர்ப்புறங்கள் அருகிலுள்ள கிராம ஊராட்சியில் செயல் படுத்தும் விதமாக கடந்த 18.12.2023 அன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தருமபுரி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பான திட்டம் கிராமப் பகுதிகளில் அமல்படுத்தும் பொருட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

 



 

அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் வெள்ளியனை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றது. அதே போல் கடந்த 18.12.2023 முதல் 06.01.2024 வரை கரூர் மாநகராட்சியில் 16 இடங்களிலும், நகராட்சிகளில் 13 இடங்களிலும், பேரூராட்சிகளில்  16  இடங்களிலும், மாநகராட்சி ஒட்டியுள்ள புறநகர்ப் பகுதிகளில் 5 இடங்களிலும், என மொத்தம்  50 இடங்களில் "மக்களுடன் முதல்வர்"  முகாம் நடைபெற்றதில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் வேண்டி 20,748 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 16,165 மனுக்கள் பல்வேறு துறையின் கீழ் மனுதாரர்களுக்கு நல திட்டங்களாக வழங்கப்பட்டுள்ளது.

 

 



 

மேலும், இம்முகாம் கரூர் மாவட்த்தில் வருகின்ற 16, 18, 23, 25, 30, 1 , 6 மற்றும் 08.08.2024 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் அதிகமாக அணுகும் 15 அரசு துறைகள் ஒரே இடத்தில் "மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் மூலம் 44 வகையான சேவைகள் வழங்கப்படவுள்ளன. அதே போன்று, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் தங்களது கோரிக்கை மனுக்களை எளிதாக பதிவு செய்யும் வகையில் சாய்வுதள வசதி, சக்கர நாற்காலிகள், குடிநீர் வசதி சுகாதார வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் இம்முகாம்களில் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 



 

எனவே பொது மக்கள் அனைவரும் தங்கள் பகுதியில் நடைபெறும் இம்முகாம்கள் மூலம் அரசின் சேவைகளை பெற்று பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் பிரபாகர், மாநகராட்சி மேயர் கவிதா, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், துனை மேயர் சரவணன், தாந்தோணி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர்  சிவகாமி மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.