கணவனை இழந்த கண்பார்வையற்ற  மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு அவர்களின் இரண்டு பெண் குழந்தைகளை கருத்தில் கொண்டு இலவச வீட்டுமனை பட்டாவினை வழங்கி , வீடியல் வீடு,  வீட்டின் ஒரு பகுதியில் கடை, குழந்தைகளுக்கு மாதந்திர கல்வி உதவி தொகை வழங்கவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் மேற்கொண்டார்.


 


 





கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஜெகஜோதிக்கு இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணைகளை வழங்கினார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், வடவாம்பாடியை சேர்ந்த  கணவனையிழந்த கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி  ஜெகஜோதி என்பவர் கௌசல்யா, கனிஷ்கா என்ற இரண்டு பெண் குழந்தையுடன் கஷ்டபடுகிறேன் என்று மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தார்.


 




அவருடைய சொந்த ஊரிலேயே தகுந்த இடத்தில் வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் திங்கள் கிழமை குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கப்பட இருந்தது. இது குறித்து தகவலும் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. கரூர் மாவட்டத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவில் மனு கொடுக்கப்பட்ட ஒரு மணிநேரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்கியுள்ளோம் இதுவரைக்கும் 20க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வீடுகள் வழங்கியுள்ளோம். 


 


 




அதனைத்தொடர்ந்து இன்றைய தினம் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி திருமதி ஜெகதேவி என்பவருக்கு அவர் வசிக்கும் கிராமத்திலேயே இலவச வீட்டுமனை பட்டாவிற்க்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. அவர் கண்பார்வையற்றவர் என்பதால் அதே இடத்தில்  எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் விடியல் வீடு திட்டத்தின் கீழ் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்காக கழிவறை, சாய்தளம் உள்ளிட்ட பிற அடிப்படை வசதிகளுடன் வீட்டிற்குள்ளேயே இருக்கும் வகையில் பிரதியோகமாக வடிவமைப்புடன் வீடு கட்டித் தரப்படும்.


 


 




மேலும், அவரின் பெண் குழந்தைக்கு சமூக குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான கல்வி நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் மாதம் ரூ.4000 கிடைப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில்  அந்த வீட்டிலேயே ஒரு பகுதியில் சிறிய கடை அமைத்து தரப்படும்.  இரண்டாவது குழந்தை வாய் பேசாமலும். காது கேட்காமல் இருப்பதால் அந்த குழந்தைக்கு தேவையான  மருத்துவ வசதிகளும் செய்து தரப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து பெண்குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொண்டு செல்லும் நோட்கள் புத்தகப்பை, புதிய ஆடைகள், காலணிகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்கள். இந்நிகழ்வில் தனித்துணை ஆட்சியர்(சபாதி) சைபுதீன் ஆகியோர் உள்ளார்.